2022 பத்தாங்காலி நிலச்சரிவு

மலேசியா|மலேசியாவின் சிலாங்கூர் மாகாணம் பத்தாங்காலியில் ஏற்பட்ட நிலச்சரிவு

2022 பத்தாங்காலி நிலச்சரிவு (2022 Batang Kali landslide) மலேசியாவின் சிலாங்கூர் மாகாணத்தில் 2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று நிகழ்ந்த ஒரு துயர சம்பவமாகும்.[1][2][3] அதிகாலை நேரத்தில் பத்தாங்காலி நகரத்தில் ஏற்பட்ட இவ்விபத்தை பத்தாங்காலி துயரம் என்றும் அழைக்கிறார்கள். இந்நகரில் சுற்றுலாப் பயணிகள் முகாம் அமைத்து தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் இயற்கை விவசாயப் பண்ணை கடுமையான நிலச்சரிவில் புதையுண்டது. முகாமில் தங்கியிருந்த 92 பேரில் 31 பேர் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர்.[4][5][6] 61 பேர் மீட்கப்பட்டனர். 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[7] இன்னும் ஒருவரை காணவில்லை. இப்பேரழிவில் 450,000 கனமீட்டர் (16,000,000 கன அடி) மண் இடமாற்றம் செய்யப்பட்டது.[8][9]

பத்தாங்காலி நிலச்சரிவு
Batang Kali landslide
பூர்வீக பெயர் பத்தாங்காலி துயரம்
ஆங்கிலப்பெயர்பத்தாங்காலி துயரம்
நாள்திசம்பர் 16, 2022 (2022-12-16)
நேரம்~2:30 am (மலேசிய நேரம்)
அமைவிடம்பாதர்சு விவசாயப் பண்ணை, பத்தாங்காலி, சிலாங்கூர், மலேசியா
புவியியல் ஆள்கூற்று03°25′26″N 101°45′10″E / 3.42389°N 101.75278°E / 3.42389; 101.75278
காரணம்நிலச்சரிவு
பங்கேற்றோர்92
இறப்புகள்31
காயமுற்றோர்8
நிலச்சரிவு நிகழ்விடம்

வரலாறு தொகு

பின்னணி தொகு

பாதர்சு விவசாயப் பண்ணை கோலாலம்பூருக்கு வடக்கே சுமார் 50 கிமீ (31 மைல்) மற்றும் கெண்டிங்கு மேட்டு நிலத்திற்கு மேற்கே சுமார் 15 கிமீ (9.3 மைல்) தொலைவில் உள்ள திட்டிவாங்சா மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள சிலாங்கூர், பத்தாங்காலிக்கு சற்று வெளியே அமைந்துள்ள ஒர் இயற்கை பண்ணையாகும். பண்ணை 2019 ஆம் ஆண்டில் இயற்கை விவசாய நடவடிக்கைகளை தொடங்க ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் உரிமம் இல்லாமல் பண்ணையில் முகாம் நடத்தப்பட்டு வந்தது. ஆறு, மலை சரிவுகள் அல்லது நீர்வீழ்ச்சிகள் போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள முகாம்களுக்கு இந்த உரிமம் அவசியமானதாகும்.[10]

பத்தாங்கலி கிள்ளான் பள்ளத்தாக்குக்கு அருகாமையில் இருப்பதால், பள்ளி விடுமுறை காலத்துடன் இணைந்து ஒரு பிரபலமான பொழுதுபோக்கு இடமாக பல குடும்பங்களை ஈர்த்து வந்தது.[11]

மலை உச்சி (மண்டலம் ஏ), பண்னைப் பார்வை (மண்டலம் பி), மற்றும் ஆற்றங்கரை (மண்டலம் சி) என்ற மூன்று பிரிவுகளை முகாம் கொண்டுள்ளது.[12] திசம்பர் 15 அன்று மாலை 92 பேர் இப்பகுதியில் இருந்தனர்.[13][14] நிலச்சரிவு ஏற்பட்ட இரவில், 81 பேர் (அதாவது 51 பெரியவர்கள், 30 குழந்தைகள்) விவசாயப் பண்ணையின் முகாமில் தங்குவதற்கு பதிவு செய்யப்பட்டிருந்தனர். முகாமில் இருந்தவர்கள் பெரும்பாலும் குடும்பங்கள், பள்ளி அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர்.[15] துல்லியமான பதிவுகள் வைக்கப்பட்டிருந்தாலும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகாமில் தங்குவதற்கு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததால் புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை என்ற அச்சமும் இருக்கிறது.[16]

நிலச்சரிவு தொகு

கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் ஆய்வுகள் மற்றும் கணக்கீடுகளின்படி, அதிகாலை 2:30 மணிக்கு முன் இந்நிலச்சரிவு தொடங்கியது. 8 மீ (26 அடி) ஆழத்துடன் 500 மீ (1,600 அடி) மற்றும் 200 மீ (660 அடி) பரப்பளவில் 450,000 கனமீட்டர் (16,000,000 கன அடி) மண் சரிவு இவ்விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.[17] நிலச்சரிவில் தோராயமாக 70 மீ (230 அடி) உயரத்தில் இருந்து 300 மீ (980 அடி) அகலம் கொண்ட பரப்பளவு உள்ளடங்கியுள்ளது.[18] சரிந்த சரிவு பண்ணையில் உள்ள மூன்று முகாம்களின் தரையையும் நேரடியாகப் பாதித்தது. கடுமையான சேதம் ஏற்பட்டு உயரமான இடிபாடுகளால் ஆன வயல்வெளி ஒன்று உருவாக்கப்பட்டது.[19][20] [21]

மேற்கோள்கள் தொகு

  1. "மலேசியா நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி". தினமணி. https://www.dinamani.com/world/2022/dec/17/malaysia-18-killed-in-landslide-3968079.html. பார்த்த நாள்: 17 December 2022. 
  2. Zin, Omar (16 December 2022). "Tragedi Batang Kali: 13 maut, tujuh mangsa cedera" (in Malay). Utusan Malaysia. https://www.utusan.com.my/nasional/2022/12/tragedi-batang-kali-13-maut-tujuh-mangsa-cedera/. 
  3. "Tragedi Batang Kali: Perkembangan terkini tanah runtuh setakat jam 2:30 petang" (in Malay). Astro Awani. 16 December 2022. https://www.astroawani.com/video-malaysia/tragedi-batang-kali-perkembangan-terkini-tanah-runtuh-setakat-jam-2-30-petang-2001136. 
  4. "Batang Kali landslide: Remains of last victim was found under 1.5m of soil and still in his sleeping bag".
  5. "பத்தாங் காலி நிலச்சரிவு பேரிடர் கடைசி நபரை தேடும் பணி தீவிரம்". வணக்கம் மலேசியா. Archived from the original on 2022-12-23. பார்க்கப்பட்ட நாள் 2022-12-23.
  6. Zolkelpi, Farid; Camoens, Austin (16 December 2022). "Batang Kali landslide: Death toll reaches 21, says Zahid". The Star. https://www.thestar.com.my/news/nation/2022/12/16/batang-kali-landslide-death-toll-reaches-21-says-zahid. 
  7. Latiff, Rozanna; Ngui, Yantoultra (16 December 2022). "Malaysia landslide kills 12 at the campsite, more than 20 missing". Reuters. https://www.reuters.com/world/asia-pacific/around-100-people-feared-trapped-malaysia-landslide-fire-department-2022-12-15/. 
  8. Chong, Debra (16 December 2022). "Batang Kali landslide: Death toll rises to eight, search-and-rescue ongoing (VIDEO)". Malay Mail. https://www.malaymail.com/news/malaysia/2022/12/16/batang-kali-landslide-death-toll-rises-to-eight-search-and-rescue-ongoing-video/45535. 
  9. Camoens, Austin; Zolkepli, Farik (16 December 2022). "Batang Kali landslide: Five more bodies found, death toll now 16". The Star. https://www.thestar.com.my/news/nation/2022/12/16/batang-kali-landslide-five-more-bodies-found-death-toll-now-16. 
  10. Zolkelpi, Farik; Camoens, Austin (16 December 2022). "Batang Kali landslide: Operator only had a licence for an organic farm, not to host camping activities, says Nga". The Star. https://www.thestar.com.my/news/nation/2022/12/16/batang-kali-landslide-operator-only-had-licence-for-organic-farm-not-to-host-camping-activities-says-nga. 
  11. "Batang Kali landslide: Camp register shows 94 names, more possibly involved, says Saifuddin". YouTube (in Malay). The Star. பார்க்கப்பட்ட நாள் 16 December 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. Zolkelpi, Farik; Camoens, Austin (16 December 2022). "Batang Kali landslide: Search focusing on two of three zones". The Star. https://www.thestar.com.my/news/nation/2022/12/16/batang-kali-landslide-search-focusing-on-two-of-three-zones. 
  13. "Batang Kali landslide: Nine victims confirmed dead as of 11 am" (in ஆங்கிலம்). Bernama. 16 December 2022. பார்க்கப்பட்ட நாள் 16 December 2022.
  14. Zolkepli, Farik; Camoens, Austin (16 December 2022). "Batang Kali landslide: Camp register shows 94 names, more possibly involved, says Saifuddin". The Star. https://www.thestar.com.my/news/nation/2022/12/16/batang-kali-landslide-camp-register-shows-94-names-more-possibly-involved-says-saifuddin. 
  15. "Batang Kali landslide: 81 people, including 30 kids, registered for an overnight stay, says campsite operator". The Star. Bernama. 16 December 2022. https://www.thestar.com.my/news/nation/2022/12/16/batang-kali-landslide-81-people-including-30-kids-registered-for-overnight-stay-says-campsite-operator. 
  16. Azmi, Hadi (16 December 2022). "Malaysia shuts all campsites for a week after landslide kills 12 in Genting Highlands". South China Morning Post. Reuters. https://www.scmp.com/news/asia/southeast-asia/article/3203499/dozens-feared-trapped-malaysia-campsite-landslide. 
  17. Zolkelpi, Farik; Camoens, Austin (16 December 2022). "Batang Kali landslide: Collapse involves 450,000 cubic metres of soil". The Star. பார்க்கப்பட்ட நாள் 16 December 2022.
  18. Koya, Zakiah (16 December 2022). "Batang Kali landslide: No visible cracks on roads at the scene, says Works Minister". The Star. https://www.thestar.com.my/news/nation/2022/12/16/batang-kali-landslide-no-visible-cracks-on-roads-at-the-scene-says-works-minister. 
  19. "Nine dead, 25 missing after landslide hits Malaysia campsite". CNBC (in ஆங்கிலம்). Reuters. 16 December 2022. பார்க்கப்பட்ட நாள் 16 December 2022.
  20. Trisha, N. (16 December 2022). "Batang Kali landslide: Eight deaths so far, rubble piled up to 30m high". The Star. https://www.thestar.com.my/news/nation/2022/12/16/batang-kali-landslide-two-fatalities-confirmed-rubble-piled-up-to-30m-high. 
  21. Ismail, Ahmad Ismadi (16 December 2022). "Batang Kali landslide: Rescue teams focus on two campsite sectors". Sinar Harian. https://www.sinardaily.my/article/186493/malaysia/national/batang-kali-landslide-rescue-teams-focus-on-two-campsite-sectors.