2023 இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல்கள்

யூதர்களின் சப்பாத் எனும் ஓய்வு நாளான 7 அக்டோபர் 2023 அன்று சனிக்கிழமை விடியற்காலை 6.30 மணி அளவில், காசாக்கரையின் பதுங்கு குழிகளிலிருந்து புறப்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலின் தெற்கு மாவட்டத்தின் எல்லைப்புறப்பகுதிகளில் 59 கிலோ மீட்டர் தொலைவிற்கு புகுந்து, இஸ்ரேலிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் தீவிரவாதிகள் காசாவிலிருந்து 5,000 ஏறிகணைகளை 80 கிலோ மீட்டர் வரை இஸ்ரேலில் ஏவினர்.[2]

2023 இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல்கள்
இசுரேல்-ஹமாஸ் போர் பகுதி

7 அக்டோபர் 2023 அன்று காசாவிலிருந்து இஸ்ரேல் பகுதிகளில் ஹமாசின் ஏவுகணை தாக்குதல் பகுதியின் செயற்கைக் கோள் படம்
நாள் 7 அக்டோபர் 2023
இடம் இஸ்ரேலின் தெற்கு மாவட்டம்
இஸ்ரேலின் தற்காப்பு தோல்வி[1]

இத்தாக்குதலில 1,180 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[3] .இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 379 இசுரேலியப் படைவீரர்களும் அடங்குவர். 7,500 பேர் காயமடைந்தனர் மற்றும் 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்தனர். ஹமாஸ் தீவிரவாதிகளால் இஸ்ரேலிய சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.

8 அக்டோபர் 2024 அன்று இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது திருப்பி தாக்கியதில் 1,609 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

நினைவேந்தல்

தொகு

இஸ்ரேலியர்கள் மீதான ஹமாசின் தாக்குதல் (7 அக்டோபர் 2024 அன்று) ஒராண்டு நினைவை ஒட்டிய உலகத் தலைவர்கள் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Morris, Loveday; Suliman, Adela (11 July 2024). "Israeli military says it failed to protect Gaza border town on Oct. 7" (in en-US). Washington Post இம் மூலத்தில் இருந்து 11 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240711172535/https://www.washingtonpost.com/world/2024/07/11/israeli-military-says-it-failed-protect-gaza-border-town-oct-7/. 
  2. Hamas terrorist attacks on October 7: The deadliest day in Israel's history
  3. "Israel's Dead: The Names of Those Killed in Hamas Attacks, Massacres and the Israel-Hamas War". Haaretz,. 25 July 2024 இம் மூலத்தில் இருந்து 3 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240803235317/https://www.haaretz.com/haaretz-explains/2023-10-19/ty-article-magazine/israels-dead-the-names-of-those-killed-in-hamas-massacres-and-the-israel-hamas-war/0000018b-325c-d450-a3af-7b5cf0210000. "Approximately 1,200 Israelis, civilians and soldiers were killed in their homes, communities and in confronting Hamas terrorists. Here are the officially confirmed names of Israel's dead in the atrocities of October 7 and the subsequent Israel-Hamas war … This list of 1618 names will be continuously updated with names that have been cleared for publication." 
  4. World leaders mark first anniversary of 7 October attack on Israel

வெளி இணைப்புகள்

தொகு