228 அமைதி நினைவுப் பூங்கா

228 அமைதி நினைவுப் பூங்கா (228 Peace Memorial Park) தைவான் நாட்டில் தாய்பெய் நகரில் ஜாங்ஜெங் மாவட்டம் 3 கெடகலன் பவுல்வர்டு என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று தளம் மற்றும் நகராட்சிப் பூங்கா ஆகும். இந்தப் பூங்காவானது 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 நிகழ்வில் தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்காகக் கட்டப்பட்டதாகும். பூங்காவின் நடுவில் தாய்பெய் 228 நினைவிடம் உள்ளது. மேலும் இங்கு தாய்பெய் 228 நினைவு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகமாத்தில் முன்பு ஜப்பானிய மற்றும் கோமின்டாங் ஆட்சிக்காலத்தின் முன்னாள் வானொலி நிலையம் இயங்கி வந்தது. தேசிய தைவான் அருங்காட்சியகம் பூங்காவின் வடக்கு நுழைவாயிலின் அருகே உள்ளது. இந்த பூங்காவில் பேண்ட்ஷெல் எனப்படும் திரையரங்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான பகுதிகள் உள்ளன.

228 அமைதி நினைவுப் பூங்கா
Map
வகைமுனிசிபல்
அமைவிடம்சாங்செங் மாவட்டம், தாய்பெய், தைவான்
பரப்பளவு71,520 m2
உருவாக்கம்1900
திறந்துள்ள நேரம்ஆண்டு முழுவதும்
228 அமைதி நினைவுப் பூங்கா
பண்டைய சீனம் 和平紀念公園
நவீன சீனம் 和平纪念公园
தாய்பெய் 228 நினைவு அருங்காட்சியகம்
தாய்பெய் 228 நினைவு அருங்காட்சியகத்தின் உள்புறம்

வரலாறு

தொகு

ஜப்பானியப் பேரரசு

தொகு

இந்த பூங்கா முதலில் 1900 ஆம் ஆண்டில் ஜப்பானிய காலனித்துவ காலத்தில் முன்னாள் கோயில் மைதானத்தில் தைகோகூ புதிய பூங்காவாக நிறுவப்பட்டது. இது தைவானில் முதல் ஐரோப்பிய பாணியில் அமைந்த நகர்ப்புற பூங்காவாகும், இது கவர்னர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் இருந்தது.

1930 ஆம் ஆண்டில், தைவானின் ஜப்பானிய அதிகாரிகள் குரியாமா ஷுனிச்சி (栗 山 山 by) வடிவமைத்த இடத்தில் ஒரு வானொலி நிலையத்தை நிறுவினர். இந்த நிலையத்தில் ஆரம்பத்தில் அரசாங்க-பொது பிரச்சார பணியகத்தின் தகவல் அலுவலகத்தின் ஒரு பிரிவான தைகோகூ ஒலிபரப்பு பணியகம் செயலாற்றி வந்தது. அடுத்த ஆண்டு, தீவு முழுவதும் ஒளிபரப்பினை மேற்கொள்வதற்காக தைவான் ஒளிபரப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. [1] தைகோகூ பார்க் வானொலி நிலையம் சங்கத்தின் ஒலிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மையமாக மாறியது.

1935 ஆம் ஆண்டில் இது தைவான் வெளிப்பாடு: காலனித்துவ ஆட்சியின் முதல் நாற்பது ஆண்டுகளின் நினைவு என்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தளங்களில் ஒன்றாக அமைந்தது. [2]

சீனக் குடியரசு

தொகு

1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் இருந்து சீனக் குடியரசிற்கு தைவானை ஒப்படைக்கப்பட்ட பின்னர், இந்தப் பூங்காவிற்கு அரசு தாய்பெய் புதிய பூங்கா என மறுபெயர் சூட்டியது. அவர்கள் ஒலிபரப்பு நிறுவனத்தின் பெயரை தைவான் ஒலிபரப்பு நிறுவனம் என்று பெயர் மாற்றினர். [1] இந்த நிலையம் கோமிண்டாங் அரசு மற்றும் இராணுவத்தின் முதன்மை ஒலிபரப்பு அங்கமாக மாறியது.

1947 ஆம் ஆண்டில், தைவானிய பொதுமக்கள் மீது ஒரு மிருகத்தனமான காவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் மீது கோபமடைந்த ஒரு குழு, நிலையத்தை கையகப்படுத்தி, கோமிண்டாங் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒலிபரப்ப அதைப் பயன்படுத்தியது. இந்த நடவடிக்கை தற்போது பிப்ரவரி 28 நிகழ்வு என குறிப்பிடப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைந்தது. தேசியவாத அரசின் அடுத்தடுத்த, மிகக் கடுமையான ஒடுக்குமுறை இந்த நிலையத்தை கோமிண்டாங் கட்டுப்பாட்டுக்கு மீட்டுக் கொண்டு வந்தது. அத்துடன் தைவானின் வெள்ளை பயங்கரவாத காலம் உருவாகக் காரணமானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சீன உள்நாட்டுப் போரில் கோமிண்டாங் தம் பகுதியை இழந்தது. அதன் தலைவர்கள் தைவானுக்கு பின்வாங்கினர். தம்மை சீனாவின் உண்மையான நாடுகடத்தப்பட்ட தேசிய அரசாக நிலைநிறுத்த முயன்ற அவர்கள், பணியகத்தின் பெயரை சீன ஒலிபரப்பு நிறுவனம் என்று பெயர் மாற்றினர்.

1972 ஆம் ஆண்டில் சீன ஒலிபரப்பு நிறுவனம் இடமாற்றம் பெற்றபோது தாய்பெய் நகர அரசு வானொலி நிலைய கட்டிடத்தின் செயல்பாட்டை எடுத்துக் கொண்டது. நகர அலுவலர்கள் இதை தாய்பெய் நகர அரசு பூங்காக்கள் மற்றும் தெரு விளக்குகள் அலுவலகத்தின் தளமாக மாற்றினர். [1]

1990 களில் தைவான் அதன் நவீன ஜனநாயக காலத்திற்குள் அடியெடுத்து வைத்தபோது, ஜனாதிபதி லீ டெங்-ஹுய் 1995 ஆம் ஆண்டில் அலுவல்பூர்வ மன்னிப்பு கோரியதோடு,தைவானின் கடந்த காலத்தைப் பற்றி மனம் திறந்த நிலையில்விவாதிக்க அழைத்தார். முதல் முறையாக 28 பிப்ரவரி 1947 நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டதோடு, அதன் முக்கியத்துவம் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டில், தாய்பெய் நகர அரசு முன்னாள் வானொலி நிலையத்தை ஒரு வரலாற்று தளமாக கட்டமைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கட்டிடத்தில் தாய்பெய் 228 நினைவு அருங்காட்சியகம் இடம் பெற்றது. தொடர்ந்து 228 அமைதி நினைவுப் பூங்காவாக மாற்றப்பட்டது . [1]

 
228 படுகொலை நினைவுச்சின்னம்

228 படுகொலை நினைவுச்சின்னம் தைவானிய கட்டிடக் கலைஞர் செங் சூ-சாய் என்பவரால் வடிவமைக்கப்பட்டது, [3] அவர் 1970 ஆம் ஆண்டில் சியாங் சிங்-குவோவைக் கொலை செய்ய மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தொடர்ந்து 1971 ஆம் ஆண்டில் கொலை முயற்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். [4] தண்டனையை அனுபவித்த பின்னர், 1991 இல் சட்ட விரோதமாக தைவானுக்குள் நுழைந்ததற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். [5] சிறையில் இருந்துகொண்டே தனது வடிவமைப்பிற்கான பதிவினை தாக்கல் செய்தார். [6] இந்த நினைவுச்சின்னம் அமைதி மற்றும் ஒற்றுமைக்கானது என்ற குறிப்புகளைக் கொண்டுபொறிக்கப்பட்டுள்ளது. [7]

25 நவம்பர் 2019 ஆம் நாளன்று, அருங்காட்சியகம் ஒரு கலாச்சார சொத்தாக கலாச்சார பாரம்பரிய பணியகத்தால் அறிவிக்கப்பட்டது.

பண்பாட்டுக் குறிப்புகள்

தொகு
  • இந்த பூங்கா பை ஹ்சியன்-யுங்கின் புகழ்பெற்ற புதினமான கிரிஸ்டல் பாய்ஸுக்கு ஒரு முதன்மையான பின்னணியை வழங்குகிறது.

போக்குவரத்து

தொகு

அருகிலுள்ள தாய்பெய் மெட்ரோ நிலையம் தேசிய தைவான் பல்கலைக்கழக மருத்துவமனை நிலையம் ஆகும் .

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Taipei 228 Memorial Museum (臺北228紀念館)". culture.tw. Taiwan Ministry of Culture. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 13, 2014.
  2. "Taiwan's Most Prominent Exposition". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  3. Johnson (திசம்பர் 13, 1994). "Taiwan builds memorial to once-forbidden subject: massacre of 20,000 in 1947" இம் மூலத்தில் இருந்து 2014-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141112204446/http://articles.baltimoresun.com/1994-12-13/news/1994347020_1_chiang-kai-shek-taiwan-cheng. பார்த்த நாள்: நவம்பர் 12, 2014. 
  4. "Taiwan native found guilty of trying to kill politician". மே 19, 1971. https://news.google.com/newspapers?nid=1946&dat=19710519&id=TJcuAAAAIBAJ&sjid=kKEFAAAAIBAJ&pg=4544,1312497. பார்த்த நாள்: நவம்பர் 12, 2014. 
  5. Shu (ஆகத்து 25, 2010). "Weaving Taiwanese History". http://www.taipeitimes.com/News/feat/archives/2010/08/25/2003481237/1. பார்த்த நாள்: நவம்பர் 13, 2014. 
  6. Kuo (பெப்பிரவரி 20, 1994). "Former fugitive designs monument". https://news.google.com/newspapers?nid=1696&dat=19940220&id=tgobAAAAIBAJ&sjid=LEgEAAAAIBAJ&pg=4424,2438159. பார்த்த நாள்: நவம்பர் 12, 2014. 
  7. "Translation of the Inscription on the 228 Massacre Monument". taiwandocuments.org. Trustees of the 228 Memorial Foundation. பெப்பிரவரி 28, 1998. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 13, 2014.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=228_அமைதி_நினைவுப்_பூங்கா&oldid=3849492" இலிருந்து மீள்விக்கப்பட்டது