6-(மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு
6-(மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு (6-(Methylsulfinyl)hexyl isothiocyanate) என்பது C8H15NOS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதைச் சுருக்கமாக 6-எம்.ஐ.டி.சி அல்லது 6-எம்.எசு.ஐ.டி.சி என்ற ஆங்கில எழுத்துகளில் குறிப்பிடுவர். ஐசோதயோசயனேட்டு குழுவைச் சேர்ந்த கரிமகந்தகச் சேர்மம் என்று இதை வகைப்படுத்தலாம். முட்டைக்கோசு, காலிபிளவர் போன்ற வகை காய்களிலிருந்து, குறிப்பாக வசாபி எனப்படும் சப்பானிய பச்சைக் கடுகு வகையிலிருந்து 6-மெத்தில்சல்பினைல்)யெக்சைல் ஐசோதயோசயனேட்டு பெறப்படுகிறது. மற்ற ஐசோதயோசயனேட்டுகளைப் போலவே இதுவும் குளுக்கோசினோலேட்டை மைரோசினேசு நொதி செல்லை காயப்படுத்தி நிலைமாற்றம் செய்வதால் உருவாகிறது.
[[File::6-(Methylsulfinyl)hexyl_isothiocyanate.svg|200px]] | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-ஐசோதயோசயனேட்டோ-6-(மெத்தில்சல்பினைல்)எக்சேன்
| |
வேறு பெயர்கள்
6-எம்.ஐ.டி.சி அல்லது 6-எம்.எசு.ஐ.டி.சி
| |
இனங்காட்டிகள் | |
4430-35-7 | |
ChemSpider | 7991398 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C8H15NOS2 | |
வாய்ப்பாட்டு எடை | 205.33 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புதிதாக துருவப்பட்ட வசாபி தண்டுப்பகுதியை தலைமுடியில் தேய்த்தால் அது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்ற நம்பிக்கை சப்பானில் தற்போது நிலவுகிறது. ஏனெனில் உலகின் மிகப்பெரிய வசாபி தயாரிப்பாளரான கின்னி நிறுவனம் 6-எம்.ஐ.டி.சி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறுகிறது [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Azouaoui, Sirine (26 May 2017). "In Japan, people are putting wasabi on their heads to stimulate hair growth". Archived from the original on 27 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2019.