8000 பிளசு
8000 பிளசு (8000 Plus) என்பது ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்ட மாதாந்திர கணினியியல் தொடர்பான இதழ் ஆகும். 1992ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிசிடபிள்யூ பிளசு என்று இதற்கு மறுபெயரிடப்பட்டது. இது ஆம்சுட்ராட் பிசிடபிள்யூ (PCW) நுண்கணினிகள் (microcomputers) குறித்த வரம்பிற்குள்ளான தகவல்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இதழாகும். இது எதிர்கால பி. எல். சி. ஆரம்ப இதழ்களில் ஒன்றாகும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இதழ் வெளிவந்தது. இதன் முதல் இதழ் அக்டோபர் 1986 தேதியிலும் கடைசி இதழ் 1996ஆம் ஆண்டு பிசிடபிள்யூ பிளசு 124 எனப் பெயரிட்டு நத்தாரிலும் வெளியானது.[1]
வகை | கணினி இதழ் |
---|---|
இடைவெளி | மாதந்தோறும் |
வெளியீட்டாளர் | பூச்சர் பிஎல்சி |
முதல் வெளியீடு | அக்டோபர் 1986 |
கடைசி வெளியீடு — Number | திசம்பர் 1996 124 |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
அமைவிடம் | சோமெர்ட்டான், சோமர்செட் |
அறிவியல் புனைவு எழுத்தாளர் டேவிட் லாங்போர்ட் 8000/பிசிடபிள்யூ பிளசு இதழுக்குக் கட்டுரை எழுதுவதை வழக்கமான கொண்டிருந்தார். இது பத்திரிக்கை வெளியான காலம் முழுமைக்கும் தொடர்ந்து.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Company history 1985 to 1989". Future plc. Archived from the original on 18 October 2005. பார்க்கப்பட்ட நாள் 23 December 2006.
வெளி இணைப்புகள்
தொகு- 8000 பிளஸ் இதழ், இணைய காப்பகத்தில் உள்ள இதழ் தொகுப்பு