ஃபிபொனாச்சி

(ஃபிபனாச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபிபொனாச்சி (Fibonacci - கிபி 1170 – 1250) ஒரு இத்தாலியக் கணிதவியலாளர். இக் கணிதவியலர் பல பெயர்களாலும் அறியப்படுகின்றார். பீசாவின் லியொனார்டோ, லியொனார்டோ பிசானோ, லியொனார்டோ பொனாச்சி, லியொனார்டோ ஃபிபொனாச்சி போன்ற பல பெயர்களாலும் அறியப்பட்டார். இடைக் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த கணிதவியலாளர் என இவர் கருதப்படுவதும் உண்டு.[1][2][3]

பீசாவின் லியொனார்டோ (ஃபிபோனாச்சி)
பீசாவின் லியொனார்டோ, "ஃபிபோனாச்சி"
பிறப்புc. 1170
பீசா, இத்தாலி
இறப்புc. 1250
பீசா, இத்தாலி
வாழிடம்இத்தாலி
தேசியம்இத்தாலியர்
துறைகணிதவியலாளர்
அறியப்படுவதுஃபிபொனாச்சி எண்
ஃபிபொனாச்சி பகாவெண்
பிரமகுப்தா-ஃபிபொனாச்சி அடையாளம்
ஃபிபொனாச்சி பல்லுறுப்புக் கோவை
ஃபிபொனாச்சி போலிப்பகாவெண்
ஃபிபொனாச்சி சொல்
தலைகீழ் ஃபிபொனாச்சி மாறிலி
Fibonacci family
Introduction of digital notation to Europe
Pisano period
Practical number

பின்வருவனவற்றுக்காக இவர் தற்கால உலகில் அறியப்படுகிறார்:

  • இந்து-அரபிக் எண்முறையை ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தினார். 13 ஆவது நூற்றாண்டில் இவரெழுதி வெளியிட்ட கணிப்பு நூல் என்னும் பொருள் கொண்ட லிபெர் அபாச்சி (Liber Abaci) என்னும் நூலில் இக்கருத்துகள் பதிவாயின.
  • ஃபிபோனாச்சி எண்கள் எனப்படும் எண் வரிசையை இவர் கண்டு பிடிக்கவில்லை. எனினும் தனது நூலில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவ்வெண்ணுக்கு இவரது பெயரைத்தழுவிப் பெயரிடப்பட்டது.

வரலாறு

தொகு

லியொனார்டோ இத்தாலியில் உள்ள பீசா நகரில் 1170 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை குக்லியெல்மோ, எளிமையான அல்லது நல்லியல்புள்ள என்னும் பொருள்கொண்ட "பொனாச்சியோ" என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுவந்தார். லியொனார்டோவுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே இவரது தாய் அலெசாந்திரா இறந்துவிட்டார். லியொனார்டோ இறந்த பின்பே இவரை ஃபிபிபொனாச்சி என அழைத்தனர். இது, பொனாச்சியோவின் மகன் எனப் பொருள் தரும் ஃபிலியஸ் பொனாச்சி என்பதன் சுருக்கம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Fibonacci's Statue in Pisa". Epsilones.com. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-08-02.
  2. Smith, David Eugene; Karpinski, Louis Charles (1911), The Hindu–Arabic Numerals, Boston and London: Ginn and Company, p. 128, archived from the original on 2023-03-13, பார்க்கப்பட்ட நாள் 2016-03-02.
  3. "Fibonacci, Leonardo".. Oxford University Press. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிபொனாச்சி&oldid=3889671" இலிருந்து மீள்விக்கப்பட்டது