ஃபிலத்தீனோ
(ஃபீலத்தீனோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஃபிலத்தீனோ (Filettino) என்பது இத்தாலியில் ரோமிலிருந்து கிழக்காக 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைப் பிராந்திய நகரமும், அங்கீகரிக்கப்படாத ஒரு சமத்தானம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1063 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள ஃபிலத்தீனோ 77.5 சதுரகிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது. இங்குள்ள மக்கள் தொகை திசம்பர் 2004 இல் 542 ஆகும். இத்தாலிய நகரான ஃபிலத்தீனோ சமஸ்தானத்தின் மேயர் லூக்கா செல்லாரி. இவர் தமது சமஸ்தானத்தை செப்டம்பர் 2011 இல் தனிநாடாக அறிவித்து விடுதலைப் பிரகடனம் செய்துள்ளார்[1] [2]. ஃபியரீத்தோ என்ற பெயரில் தனியான நாணயத் தாளும் அச்சிட்டப்பட்டுள்ளது.
ஃபிலத்தீனோ | |
---|---|
Principality di Filettino | |
நாடு | இத்தாலி |
பரப்பளவு | |
• மொத்தம் | 77.5 km2 (29.9 sq mi) |
ஏற்றம் | 1,063 m (3,488 ft) |
மக்கள்தொகை (திசம்பர் 2004) | |
• மொத்தம் | 542 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 03010 |
Dialing code | 0775 |
பாதுகாவல் புனிதர் | சான் பெர்னார்டீனோ டா சியேனா |
புனிதர் நாள் | மே 20 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
உசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- www.comunefilettino.it/
- www.filettino.org பரணிடப்பட்டது 2020-10-25 at the வந்தவழி இயந்திரம்