ஃபோர்ப்ஸ்

(ஃபோர்ப்ஸ் இதழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபோர்ப்ஸ் என்பது மாதம் இருமுறை வெளியாகும் இதழ் ஒன்றை வெளியிடும் ஓர் அமெரிக்க வெளியீட்டகமும் ஊடக நிறுவனமுமாகும். இதன் முதன்மையான இதழ் ஃபோர்ஸ் மாதமிருமுறை வெளியிடப்படுகிறது. நாட்டளவில் வணிக இதழ் வகையில் இதன் போட்டியாளர்கள் ஃபார்ட்சூன் (இதழ்) மற்றும் பிசினசு வீக் ஆகும். இந்த இதழ் வெளியிடும் பட்டியல்கள் (அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்கள்,உலக பில்லினர்களின் பட்டியல் போன்றவை) புகழ்பெற்றவை. இதன் குறிக்கோள்: முதலாளிகளின் கருவி ("The Capitalist Tool"). இதன் முதன்மை தொகுப்பாசிரியராக ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் விளங்குகிறார்.

ஃபோர்ப்ஸ்
ஃபோர்ப்ஸ் கட்டிடம் - நியூயார்க் நகரின் ஐந்தாம் அவென்யூவில்
முதன்மை ஆசிரியர்ஸ்டீவ் ஃபோர்ப்ஸ்
முதல் வெளியீடு1917
நாடு ஐக்கிய அமெரிக்கா
அமைவிடம்நியூயார்க் நகரம்
மொழிஆங்கிலம்
வலைத்தளம்ஃபோர்ப்ஸ்.கொம்

வரலாறு

தொகு

1917ஆம் ஆண்டு பி.சி.ஃபோர்ப்சும் வால்ஸ்ட்ரீட் இதழின் மேலாளர் வால்டர் த்ரேயும் இணைந்து ஃபோர்ப்ஸ் இதழை துவக்கினர். பி.சி.ஃபோர்ப்ஸ் அதன் முதன்மை தொகுப்பாசிரியராக தமது இறப்பு (1954) வரை இருந்தார். அவருக்கு உதவியாக அவரது இரு மூத்த மகன்கள் புரூசு சார்லஸ் ஃபோர்ப்ஸ்(1916–1964) மற்றும் மால்கம் ஸ்டீவன்சன் ஃபோர்ப்ஸ் பணியாற்றினர்.தந்தை இறந்த பின்னர் புரூசு இதழ் மேலாண்மையை மேற்கொண்டார். அவரது பணிக்காலத்தில்,1954-1964 இதழ் விற்பனை இருமடங்காக உயர்ந்தது.இவரைத் தொடர்ந்து வந்த மால்கம் ஃபோர்ப்ஸ் காலத்தில் இதழுக்கென தொகுப்பாசிரியர்களை வேலைக்கு அமர்த்தினார். தவிர தற்போது (பரவுதல் பெற்று) பரபரப்பூட்டிவரும் பட்டியல்களை வெளியிடத் துவங்கினார்.

1990இல் மால்கம் இறந்தபிறகு அவரது மூத்த மகன் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் தலைமையேற்றுக் கொண்டார்.

ஃபோர்ப்ஸ் இணையதளம்

தொகு

டேவிட் சுர்பக் ஃபோர்ப்ஸ் இணையதளத்தை 1996ஆம் ஆண்டு ஏற்படுத்தினார். அச்சு இதழைப் போன்றே இந்த இணையதளமும் பில்லினர்கள் மற்றும் அவர்களது சொத்துக்கள்,குறிப்பாக விலைகூடிய வீடுகளும் வாழ்விடங்களும், குறித்த பட்டியல்களை வெளியிடுகிறது. [1] இது உலகின் கூடுதலாகப் பார்க்கப்படும் வணிக வலைத்தளம் என கூறுகிறது[2].

பட்டியல்கள்

தொகு

ஃபோர்ப்ஸ் பல பட்டியல்களை,பல்வேறு பகுப்புகளில் வெளியிடுகிறது. பில்லினர்களின் பட்டியல் மிகவும் அறியப்பட்டது. அவற்றில் சில:

நிறுவனங்கள்

தொகு
  • 200 சிறந்த சிறுநிறுவனங்கள்
  • 400 சிறந்த பெரும் நிறுவனங்கள்
  • ஃபோர்ப்ஸ் 500
  • ஃபோர்ப்ஸ் குளோபல் 2000
  • மிகப்பெரும் தனியார் நிறுவனங்கள்

மக்கள்

தொகு

ஃபோர்ப்ஸ் வெளியிடும் நிகரமதிப்பு பட்டியல்கள் பொதுமக்களிடையே பிரபலமாகியுள்ளன.அவர்களது துப்பறிதலைக்கொண்டு தயாரிக்கப்படும் இத்தரவுகள் உண்மைக்கு மிக அருகில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

  • உயரதிகாரிகள் சம்பளம்
  • ஃபோர்ப்ஸ் 400 - பணக்கார அமெரிக்கர்கள்
  • மைதாஸ் பட்டியல், ஆண்டின் தொழில்நுட்பம் மற்றும் உயிரியலில் முதன்மையான இலாபம் கண்டோர்
  • உலகின் மிகவும் பணக்காரர்களின் பட்டியல்
  • சீனா செல்வந்தர் பட்டியல்
  • இந்தியா செல்வந்தர் பட்டியல்
  • உலகின் மிகவும் செல்வாக்குடைய 100 பெண்கள்
  • பிரபலங்கள் 100, ஆண்டின் புகழ்பெற்ற,பணம்படைத்த பிரபலங்கள் பட்டியல்(நிகழ்ச்சியாளர்கள், இசைக்கலைஞர்கள்,தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்)
  • மிகவும் சம்பாதிக்கும் இறந்த பிரபலங்கள், இறந்தபின்னும் தங்கள் படைப்புகளின் வழியே வருமானமுடைய பிரபலங்கள் பட்டியல்

இடங்கள்

தொகு
  • தனிநபருக்கு சிறந்த நகரங்கள்
  • வணிகம் செய்ய சிறந்த இடங்கள் (2008க்கான பட்டியல்).
  • முதன்மை பல்கலைக்கழகங்கள் [1]
  • மிகவும் விலையுள்ள அஞ்சல்குறிகள்
  • அமெரிக்காவின் விலைமிகுந்த வாடகையிடங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Jobs: Motley to Leave Time Inc., Plus More Job-Hopping Fun". Archived from the original on 2008-02-18. பார்க்கப்பட்ட நாள் 2008-01-05.
  2. "At Forbes.com, Lots of Glitter but Maybe Not So Many Visitors - New York Times". பார்க்கப்பட்ட நாள் 2008-01-05.

மேலும் படிக்க

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபோர்ப்ஸ்&oldid=3704096" இலிருந்து மீள்விக்கப்பட்டது