அகத்மாத்தோர்
அகத்மாத்தோர் (agadmator) என அழைக்கப்படும் அந்தோனியோ ராதிச் (Antonio Radić; பிறப்பு: 16 சூன் 1987), ஒரு குரோவாசிய யூடியூப் பதிவரும், சதுரங்க ஆட்டக்காரரும் ஆவார். இவரின் யூடியூப் ஓடையின் பெயர் அகத்மாத்தோரின் சதுரங்க ஓடை (agadmator's chess channel) ஆகும். 2021 பிப்ரவரி 7 அன்று இவரது ஓடை 1,000,000 சந்தாதாரர்களைக் கடந்தது. ராதிச்சின் ஓடையில் உள்ள காணொளிகள் மொத்தம் 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.[1][2][3][4] அவரது ஓடையில், இராதிச் சமீபத்திய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சதுரங்க விளையாட்டுகளை மதிப்பாய்வு செய்கிறார்.
அகத்மாத்தோர் Agadmator | |
---|---|
அந்தோனியோ இராதிச் | |
தனிப்பட்ட தகவல் | |
பிறப்பு | அந்தோனியோ இராதிச் Antonio Radić 16 சூன் 1987 கிரித்சேவிச், குரோவாசியா, யுகோசுலாவியா |
தொழில் | யூடியூப் பதிவாளர் |
யூடியூப் தகவல் | |
ஒளிவழித்தடம் | |
செயலில் இருந்த ஆண்டுகள் | 2016–இன்று வரை |
சந்தாதாரர்கள் | 1.16 மில். |
மொத்தப் பார்வைகள் | 502 மில். |
10 செப்டம்பர் 2021 அன்று தகவமைக்கப்பட்டது |
அந்தோனியோ இராதிச் Antonio Radić | |
---|---|
நாடு | குரோவாசியா |
உச்சத் தரவுகோள் | 2010 (செப்டம்பர் 2010) |
அமெரிக்க சதுரங்க எழுத்தாளர் கர்னல் டேவிட் ஏ. ஹேட்டர் அவரை "யூடியூப்பின் முன்னணி சதுரங்க ஓடையாளர்களில் ஒருவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.[5]
பின்னணி
தொகுஇராதிச்சின் வசிப்பிடம் குரோவாசியாவில் கிரித்சேவிச் ஆகும்.[6] பீடே மாஸ்டரான அவரது தாத்தா அண்டோ கிரண்ஜிச், இவருக்கு நான்கு வயதில் சதுரங்கத்தை அறிமுகப்படுத்தினார். இருப்பினும், அவர் பின்னர் விளையாடுவதை நிறுத்தி, 17 வயது வரை சதுரங்கத்திற்கு திரும்பவில்லை.[3] இராதிச்சின் உச்ச பிடே ஈலோ மதிப்பீடு 2010 ஜூலை 2010 இல் அடையப்பட்டது (அக்டொபர் 2021இல் அவரின் மதிப்பீடு 1949).[7] இவர் அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், செஸ்.காம், லிசெஸ் போன்ற பல்வேறு இணைய சதுரங்க தளங்களில் விளையாடுகிறார்.[3][8]
யூடியூப் ஓடை
தொகுரெடிக் முதலில் தனது யூடியூப் சேனலைத் 2007-இல் தொடங்கினார். அப்போது அவர் தனது தந்தையுடன் இணைந்து திருமணக் காணொளிப் பதிவராகப் பணியாற்றினார். அவர் தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்த திருமணக் காணொளிகளை தனது ஓடையில் வெளியிட்டார். அவர் பின்னர் 2016-இல் சதுரங்கக் காணொளிகளை வெளியிடத் தொடங்கினார். அவரது யூடியூப் ஓடை 2017-இல் சுமார் 20,000 சந்தாதாரர்களை அடைந்து அவரது வழக்கமான வருமானத்தை விட அதிக வருமானத்தை ஈட்டித் தந்தது.[2] முழு நேரமும் ஓடையில் கவனம் செலுத்த ரெடிக் தனது திருமண வீடியோகிராபர் தொழிலை கைவிட்டார்.[3][9] கிட்டத்தட்ட ரெடிக்கின் அனைத்துக் காணொளிகளும் ஒரே வடிவத்தைப் பின்பற்றுகின்றன: ஒரு சதுரங்க விளையாட்டின் விமர்சனம்.[1] அவர் வழக்கமாக தினசரி அடிப்படையில் புதிய காணொளிகளை வெளியிடுவார், 24 மணி நேரத்திற்குள் பெரிய போட்டிகளின் விளையாட்டுகளை மதிப்பாய்வு செய்வார்.[3] உலக சதுரங்க வாகையாளர் 1921 போட்டியின் விளையாட்டுகள் போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சதுரங்கப் போட்டிகள் பற்றிய அவரது மதிப்பாய்வுகள் தொடராக அமைக்கப்பட்டுள்ளன.[10] அவரது மிகவும் பிரபலமான காணொளி "சதுரங்க வரலாற்றில் சிறந்த இராணி தியாகம்" என்ற தலைப்பில் உள்ளது. அந்தக் காணொளி 2021 செப்டம்பர் நிலவரப்படி 6.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தக் காணொளியில், அவர் 1962-இல் நடந்த ரசீத் நெசுமெத்தீனொவ், ஒலெக் செர்னிக்கோவ் இடையேயான ஒரு விளையாட்டை பகுப்பாய்வு செய்கிறார்.[11]
2021 பிப்ரவரி 7 இல், இவரது ஓடை 1 மில்லியன் சந்தாதாரர்களை எட்டியது. இந்த சாதனையை செய்த முதல் சதுரங்க ஓடையாளர் இவர் ஆவார். இவருக்குப் பின்னர் இகாரு நகமுரா, லெவி ரோஸ்மன் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Agadmator's Chess Channel". YouTube. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
- ↑ 2.0 2.1 Ninan, Susan (4 August 2020). "Agadmator: From smalltown Croatia, an unlikely chess phenomenon". ESPN. ESPN. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Shah, Sagar (31 October 2018). "Agadmator - the man who has 290,000+ followers on YouTube". ChessBase India. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
- ↑ 4.0 4.1 Shah, Sagar (8 February 2021). "First Chess Channel to Hit 1 million Subs". ChessBase India YouTube channel. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ Hater, Colonel David A. (19 March 2019). "Tani Wins at NYS Scholastic Championships". United States Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
- ↑ Belani, Hrvoje (21 February 2018). "Antonio Radić: 'Svojim YouTube kanalom mogu svakoga zainteresirati za šah'" (in Croatian). பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Radic, Antonio". FIDE. பார்க்கப்பட்ட நாள் August 12, 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Agadmator". Lichess. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
- ↑ Johnson, Ben (14 January 2020). "The Perpetual Chess Podcast Ep.160". The Perpetual Chess Podcast. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
- ↑ "Capablanca vs. Lasker - World Championship Match 1921". YouTube. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
- ↑ "The Greatest Queen Sacrifice in Chess History - Nezhmetdinov vs Chernikov (1962)". YouTube. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- யூடியூபில் Agadmator காணொளி
- அகத்மாத்தோர் rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- Kumthekar, Shubham (11 June 2020). "Agadmator: "Be consistent and make content that you enjoy yourself!"". followchess.com. பார்க்கப்பட்ட நாள் 12 June 2020.
- Ninan, Susan (4 August 2020). "Agadmator: From smalltown Croatia, an unlikely chess phenomenon". espn.com. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- Shah, Sagar (31 October 2018). "Agadmator - the man who has 290,000+ followers on YouTube". ChessBase India. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
- Shah, Sagar (8 February 2021). "First Chess Channel to Hit 1 million Subs". ChessBase India YouTube channel. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.