அகமணி-விஜயா

வங்காள நாட்டுப்புற பாடல் வகைகள்

அகமணி-விஜயா ( Agamani-Vijaya ) என்பது வங்காளி நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளாகும்.[1] [2] அகமணிப் பாடல்கள் துர்கா பூஜை பண்டிகைக்கு முன்னதாக இந்துக் கடவுளான பார்வதி தனது பெற்றோரின் வீட்டிற்கு ஒரு மகளாகத் திரும்புவதை விவரிக்கின்றன.[3][2] மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு பார்வதி தனது கணவர் சிவனிடம் திரும்பும்போது பிரிவின் சோகத்தை விவரிக்கும் விஜயம் பாடல்கள் தொடர்ந்து வருகின்றன. இமயமலையின் மன்னனின் மகள் பார்வதி தேவி - சிவபெருமானை மணந்த புராணக் கதைகள் பாடல்களுக்குத் தோற்றம் தரும் கருப்பொருளாகும்.

பின்னணி

தொகு
 
எல்லோரா குகைச்சிற்பம் - தேவர் புடைசூழ சிவன் - பார்வதி திருமணம்.

தட்கனின் மகளும், ஈசனின் முதல் மனைவியுமான தாட்சாயிணியே மீண்டும், பார்வதியாக அவதரித்ததாக, புராணங்கள் சொல்கின்றன.[4] திருமணத்திற்குப் பின் ஈசனுடன் பார்வதியும் கயிலை சென்று வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு பிள்ளையார், முருகன் ஆகியோர் பிள்ளைகளாக அவதரிக்கின்றனர்.[5]

இவ்வகைப் பாடல்களில் சிவன் துறவியாகவும் என்று விவரிக்கப்படுகிறார். மேலும் அவர் ஏழைக் கணவனாகவும் குடும்ப வாழ்க்கையின் பந்தங்களில் அதிக அக்கறை இல்லாதவராக அறியப்படுகிறார். இலையுதிர் காலத்தில் ஒரு இரவு, பார்வதியின் தாய் தேவி மேனகா திருமணம் செய்து கொண்டு சென்ற தனது மகளைப் பற்றி கனவு காண்கிறார். பண்டிகைக்கு மட்டும் பார்வதியை வீட்டிற்கு அழைத்து வருமாறு மேனகா தனது கணவரை வற்புறுத்தினார். இதனால் மூன்று நாட்கள் திருவிழாவிற்கு வந்து திரும்பிச் செல்ல தந்தையின் வேண்டுகோளுக்கு பார்வதி சம்மதிக்கிறார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Datta 2006
  2. 2.0 2.1 Bhowmik 2012
  3. Datta 2006, ப. 95
  4. William J. Wilkins, Uma - Parvati, Hindu Mythology - Vedic and Puranic, Thacker Spink London, pp 300-301
  5. Ganesa: Unravelling an Enigma By Yuvraj Krishan p.6
  • Datta, Amaresh (2006), The Encyclopaedia Of Indian Literature Vol 1, Sahitya Akademi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1803-8.
  • Bhowmik, Dulal (2012), "Agamani-vijaya", in Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமணி-விஜயா&oldid=3909855" இலிருந்து மீள்விக்கப்பட்டது