அகமது அம்லா
அகமது அம்லா (Ahmed Amla, பிறப்பு: செப்டம்பர் 15 1979) தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 128 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 127 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997/98-2013ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்த்தில் அம்லா அனைத்து வகையான துடுப்பாட்ட்டப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது படிப்பில் வணிகப் பட்டப்படிப்பில் கவனம் செலுத்தவும், வணிக நலன்களைத் தொடரவும் திட்டமிட்டார். [1]
2011 ஆம் ஆண்டு முதல் 2013 வரை அம்லா மொசாம்பிகன் தேசிய அணியின் பயிற்சியாளராக பணியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் ஒரு ஆலோசகராகவும் பின்னர் மூத்த பயிற்சியாளராகவும் இருந்தார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ahmed Amla retires from cricket, 18 April 2013 URL visited on 13 December 2013
- ↑ Firdose Moonda (28 May 2011). "Taking Africa to the next level" – ESPNcricinfo. Retrieved 11 February 2015.