அகர், ராஜஸ்தான்
அகர் (Ahar) என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாகும். இது இந்தியாவின் தற்போதைய ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அகர் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
அகர் | |
---|---|
பண்டைய நகரம் | |
ஆள்கூறுகள்: 24°35′14″N 73°43′18″E / 24.587258°N 73.721550°E | |
நாடு | India |
மாநிலம் | ராஜஸ்தான் |
மாவட்டம் | உதய்பூர் |
வரலாறு
தொகு1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் இப்பகுதி செப்புக் கால அகர்-பனாஸ் கலாச்சாரத்தின் தளம் என்பதை வெளிப்படுத்தியது. [2] இங்கு இரண்டு தனித்துவமான கலாச்சாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - முதல் அகர் காலம் (கிமு 2580 முதல் கிமு 1500 வரை) , இரண்டாம் அகர் காலம் (கிமு 1000 முதல்). [2]
நவீனத்திற்கு முந்தைய சகாப்தத்தில், ஏறக்குறைய பொ.ச. 948இல் மேவாரின் உதய்பூர் இராச்சியத்தில் குகில ஆட்சியாளர்களின் தலைநகரான அகர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்தது. மேலும் நக்டாவிற்கு மாற்றப்படும் வரை 1116 வரை அது தலைநகராக இருந்தது. [3] [4] வரலாற்றில் அகதபுரம் என்றும் அத்புரம் என்றும் இதனை அழைத்துள்ளனர். [4]
சான்றுகள்
தொகு- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: அகர், ராஜஸ்தான்
- ↑ 2.0 2.1 Hooja, Rima (July 2000). "The Ahar culture: A Brief Introduction". Serindian: Indian Archaeology and Heritage Online (1). http://www.serindian.com/sa-research/sa0aa21.htm.
- ↑ Bhattacharya, A.N. (2000). Human Geography of Mewar. Himanshu Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186231906.
- ↑ 4.0 4.1 Jain, Kailash Chand. Ancient Cities and Towns of Rajasthan, A Study of Culture and Civilization. Motilal Banarsidass.