அகஸ் சலீம்

இந்தோனேசிய அரசியல்வாதி

ஹாஜி அகஸ் சலீம் (Haji Agus Salim 1884 அக்டோபர் 8 - 1954 நவம்பர் 4 ) இவர் ஒரு இந்தோனேசிய பத்திரிகையாளர், இராஜதந்திரி மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1947 மற்றும் 1949 க்கு இடையில் இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

அகுஸ் சலீம் 1884 அக்டோபர் 8 ஆம் தேதி புக்கிடிங்கி புறநகர்ப் பகுதியான கோட்டோ கடாங் கிராமத்தில் பிறந்தார் . மசுசோதோயல்காக் சலீம் என்பது இவரின் இயற்பெயர் ஆகும் .இவரது தந்தை, சூட்டன் முகமது சலீம், ஒரு காலனித்துவ வழக்குரைஞரும், நீதிபதியும் ஆவார். இவர் தஞ்சாங் பினாங்கில் உள்ள சுதேச நீதிமன்றத்தில் உயர் நீதிபதியாக இருந்தார். அவரது இயற்பெயர், "சத்தியத்தின் பாதுகாவலர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது குழந்தை பருவத்திலேயே அகஸ் சலீம் என்று மாற்றப்பட்டது.[1]

கல்வி தொகு

சலீம் தனது தொடக்கக் கல்வியை ஐரோப்பெசே லாகேர் பள்ளியில் (ELS) படித்தார் . அந்த நேரத்தில், ஒரு ஐரோப்பியர் அல்லாத குழந்தை அனைத்து ஐரோப்பிய பள்ளியில் சேருவது சிறப்பான ஒன்றாக கருதப்பட்டது. இவர் பத்தாவியாவிலுள்ள கொகீர் பர்கெர் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். மற்றும் டச்சு கிழக்கிந்திய தீவுகளிலேயே அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்று பட்டம் பெற்றார். சலீமின் தந்தை தனது இரண்டு மகன்களான அகஸ் மற்றும் சேக்கப் ஆகியோருக்கு ஐரோப்பியர்களுடன் சமமான நிலை வழங்க விண்ணப்பித்திருந்தார். (பின்னர் வழங்கப்பட்டது) இருப்பினும், நெதர்லாந்தில் மருத்துவம் படிக்க அரசு உதவித்தொகை பெற இவர் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. பெண்களின் உரிமைகள் மற்றும் விடுதலையைப் பற்றிய எழுத்துக்களால் பின்னர் பிரபலமடைந்த மற்றொரு ஐரோப்பிய மாணவி கார்த்தினி, சலீமுக்காக தனது சொந்த உதவித்தொகையை ஒத்திவைக்க முன்வந்தார்; இதுவும் நிராகரிக்கப்பட்டது. [2]

பூர்வீக விவகாரங்களைப் பற்றி நன்கு அறியப்பட்ட ஒரு முக்கிய காலனித்துவ நிர்வாகி சி. எஸ். கர்கிரோன்சே, சலீமை தனது பிரிவின் கீழ் அழைத்துச் சென்று 1905 ஆம் ஆண்டில் இண்டீஸை விட்டு வெளியேறி ஜெத்தாவில் உள்ள டச்சு தூதரகத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் செயலாளராகவும் பணியாற்ற ஏற்பாடு செய்தார். அங்கு இவர் ஹஜ் விவகாரங்களைக் கையாண்டார். இது ஏதோவொரு வகையில், மஸ்ஜித் அல்-ஹராம் அஹ்மத் காதிப் அல்- மினாங்க்கபாவியின் நன்கு அறியப்பட்ட ஷாபி இமாம், நெருங்கிய உறவினரின் தீவிர போதனைகளிலிருந்து அவரை தூர விலக்குவதாகும். [1]

பத்திரிக்கைத் தொழில் தொகு

சலீம் 1911 இல் இண்டீஸுக்குத் திரும்பி பத்திரிகைத் தொழிலைத் தொடர்ந்தார். மேலும் இவர் இதழ்கள் மற்றும் கிந்தியா பரோ, பட்சார் ஆசியா மற்றும் மொயெசுடிகா போன்ற வெளியீடுகளுக்கு பங்களித்தார். பின்னர் இவர் சரேகத் இஸ்லாமுடன் இணைந்த நெராத்சா என்ற செய்தித்தாளில் ஆசிரியராக பணியாற்றினார். அதில் இவர் ஒரு தீவிர உறுப்பினராகவும் இருந்தார். அதில் இருந்தபோது, இவர் தனது சொந்த ஊரான கோட்டோ கடாங்கில் ஒரு தனியார் காலண்ட்சே இண்டிசே பள்ளியை (எச்.ஐ.எஸ்) நிறுவினார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சாவாவுக்குத் திரும்பினார்

அரசியல் செயல்பாடு தொகு

தேசிய விழிப்புணர்வு என்று அழைக்கப்படும் காலகட்டத்தில், வளர்ந்து வரும் இந்தோனேசிய தேசியவாத இயக்கத்தின் மிகவும் குரல் கொடுக்கும் ஆதரவாளர்களில் ஒருவரான சலீம் ஆனார். இவர் சரேகத் இஸ்லாத்தில் ஒரு முக்கிய தலைவராக ஆனார், மேலும் அதன் தலைவரான ஓமர் சைத் சோக்ரோமினோதோவின் வலது கையாகக் கருதப்பட்டார். கெசாசில் இருந்த காலத்திற்குப் பிறகு ஒரு உறுதியான இஸ்லாமியவாதியான சலீம், செமான், தான் மலாக்கா மற்றும் தர்சனோ தலைமையிலான சரேகத் இஸ்லாத்தின் பெருகிய இடதுசாரி பிரிவினருடன் முரண்பட்டார்; இந்த மூவரும் 1923 ஆம் ஆண்டில் காலனியின் முதல் பொதுவுடமைக் கட்சியான இண்டீஸ் பொதுவுடமை ஒன்றியத்தைக் கண்டுபிடிப்பதற்காக சரேகத் இஸ்லாத்துடன் பிரிவின் முறிவுக்கு முன்னோடியாக இருந்தனர். 1934 இல் சோக்ரோ இறந்த பிறகு, சலீம் கட்சியின் அறிவுசார் தலைவரானார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Laffan, Michael F. (2003). Between Batavia and Mecca: Images of Agoes Salim from the Leiden University Library. 
  2. Rizqa, Hasanul. "Masa Kecil Haji Agus Salim, 'the Grand Old Man' (2)". Republika.co.id. பார்க்கப்பட்ட நாள் 24 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகஸ்_சலீம்&oldid=2876852" இலிருந்து மீள்விக்கப்பட்டது