அகிங்கம்

அகிங்கம் (Akingam) என்பது தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமம் மற்றும் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வட்டமாகும். இது அனந்த்நாகில் உள்ள லால் சௌக்கிலிருந்து சுமார் 14.2 கிலோமீட்டர் (8.8 மைல்) தொலைவில் உள்ளது. இது அச்சாபல் மற்றும் கோக்கர்நாக் சுற்றுலா தலங்களுக்கு ஒரு வழியாக உள்ளது. வருவாய் பதிவுகளில், அகிங்கம் கிராமம் இன்னும் மகான் சிவ பகவதி என்று அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள கிராமங்கள் மொக்ரிபுரா, கில்லர், படாசுகம், கார்த்போரா மற்றும் படூரா ஆகியன.

புள்ளி விவரங்கள்தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி [1], அகிங்கத்தில் 5,007 பேர் இருந்தனர். 755 குடும்பங்கள் வசித்து வந்தனர். இதில் 2,026 தொழிலாளர்கள் . 2,579 ஆண்களும், 2,428 பெண்களும் இருந்தனர். அகிங்கத்தின் மொத்த மக்கள் தொகையில் 17.93%, 898 பேர், 0-6 வயதுடைய குழந்தைகள்.

அகிங்கத்தின் சராசரி பாலின விகிதம் 941 பெண்களும், 1,000 ஆண்களும் என இருந்தது. இது ஜம்மு-காஷ்மீரின் மாநில சராசரியை விட 889: 1000 ஆக இருந்தது. அகிங்கத்தின் குழந்தை பாலின விகிதம் ஜம்மு-காஷ்மீரின் சராசரியை விட 848: 1000 முதல் 862: 1000 வரை குறைவாக இருந்தது.

2011 ஆம் ஆண்டில், அகிங்கத்தின் கல்வியறிவு விகிதம் 67.41% ஆகவும், ஜம்மு-காஷ்மீரின் கல்வியறிவு விகிதம் 67.16% ஆகவும் இருந்தது. அகிங்கத்தின் ஆண் கல்வியறிவு விகிதம் 76.40% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 58.09% ஆகவும் இருந்தது.

அடிப்படை வசதிகள்தொகு

இமயமலை மலைத்தொடரின் அடிவாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இது அகிங்கத்திலிருந்து 200 மீட்டர் (தோராயமாக) தொலைவில் அமைந்துள்ளது.

அரசு முதன்மை சுகாதார மையம் ஒன்று [2] 20 மீட்டர் தொலைவில் உள்ளது

நன்கு நிறுவப்பட்ட சுற்றுலா மையத்துடன் ஜம்மு & காஷ்மீர் அரசாங்கத்தால் அகிங்கம் சுற்றுலா கிராமத்தின் நிலையை கொண்டுள்ளது. அகிங்கம் கிராமம் காஷ்மீரி பண்டிதர்களின் பந்த் கலைஞர்களைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் 1990 ல் கிராமத்தை விட்டு வெளியேறினர். அகிங்கம் மக்கள் ஆழ்ந்த சூபி மற்றும் தோற்றத்தில் தத்துவவாதிகள் ஆவ்ர்.

அகிங்கம் பல பாரம்பரிய மற்றும் புனித தளங்களால் சூழப்பட்டுள்ளது. இது பழமையான ஜாமியா மஸ்ஜித் (போனகம்), மிகப்பெரிய ஜாமியா மஸ்ஜித் ஷரீப் பெத்காம், ஜியாரத் ஷரீப் சதா ரேஷி சாஹிப் மற்றும் இஸ்லாமிய துறவி ஷா-இ-அஸ்ரரின் ஜியாரத் ஷரீப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதற்கு நன்கு நிறுவப்பட்ட சுற்றுலா மையத்துடன் ஜம்மு & காஷ்மீர் அரசு சுற்றுலா கிராமத்தின் அந்தஸ்தை வழங்கியது. .

சிவ பகவதி கோயில்தொகு

ஜகதாம்பாவின் புகழ்பெற்ற ஆலயம் ஸ்ரீ சிவ பகவதி ஜம்மு-காஷ்மீர் கரையான அகிங்கத்திலிருந்து 240–250 மீட்டர் (தோராயமாக) அமைந்துள்ளது. தேவதாரு மற்றும் பரந்த மேய்ச்சல் நிலங்களுடன் அழகான காடுகளின் அடிவாரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. சிவ பகவதி கோயில் இப்பகுதியின் பழமையான புனித இடமாகும்.

குறிப்புகள்தொகு

  1. "Akin Gam Village Population - Kokernag - Anantnag, Jammu and Kashmir". www.census2011.co.in. 2019-11-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. "District Anantnag". jkhealth. 2016-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிங்கம்&oldid=3230709" இருந்து மீள்விக்கப்பட்டது