அகிலத்திருநாயகி

அகிலத்திருநாயகி என்பவர் இலங்கையைச் சேர்ந்த தடகள வீராங்கனையாவார். இவர் கடந்த 2023 நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று முடிந்த 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் சுமார் 3 பதக்கங்களை வென்று வெற்றிவாகை சூடிக்கொண்டார்.[1] இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

சாதனைகள்

தொகு

அகிலத்திருநாயகி அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்று அரங்கேறிய 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பதக்கவேட்டையை நிகழ்த்திக்காட்டினார்.[2] இலங்கைத்திருநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 2 தங்கம் உள்ளடங்கலாக மொத்தமாக மூன்று பதக்கங்களைச் சுவீகரித்துக் கொண்டார். இதில் குறிப்பாக அன்னையார் பாதணி ஏதும் அணியாமல் தடகள போட்டிகளில் பங்கேற்று இவ்வாறான சாதனைகளை நிறைவேற்றினார்.[3][4] இவர் இத்தனைக்கும் தனது 71 வது அகவையில் இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. அன்னார் 1500 மற்றும் 3000 மீட்டர் ஓட்டப்போட்டிகளில் வெறும்கால்களுடன் ஓடித் தங்கப்பதக்கங்களை வென்று பலருக்கு ஒரு முன்மாதிரியாக தோன்றியிருக்கிறார். வயது என்பது ஒரு தடையே கிடையாது எந்த வயதிலும் சாதிக்கலாம் என்று இவர் திடசங்கட்பம் பூண்டு இந்தச் சாதனையை 71 வயதில் அரங்கேற்று இருக்கிறார்.

அகிலத்திருநாயகி அவர்களுடைய இந்த மகத்தான சாதனையானது பெரும் பேசுபொருளாக இலங்கையில் மாறியது. இலங்கையில் குறிப்பாகப் பெரும்பாலான சிங்கள மக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டார்.[5] அத்துடன் இவர் தனது சொந்த ஊரான முல்லைத்தீவுக்கும் பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.[6][7]

இவருடைய இந்தச் சாதனையது குறிப்பாகப் பெரிதாக எந்த நிதி வசதி இல்லாமல் நிகழ்த்திக்காட்டியிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. இலங்கையில் இருக்கும் அரசியல் வாதிகள் தீடீரென இவருடைய சாதனைக்குச் சொந்தம் கொண்டாடத் துவங்கியதோடு இவருடன் செலிபிஏ புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த அரசியல்வாதிகளின் செயல்களை இலங்கையில் பலரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இதுவரை அகிலத்திருநாயகி அவர்களைக் கணக்கெடுக்காத அரசியல்வாதிகள் இப்போது அவருடன் படம் எடுப்பதானது அருவருக்கத்தக்க விடயம் எனச் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டுள்ளார்கள்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலத்திருநாயகி&oldid=3833209" இலிருந்து மீள்விக்கப்பட்டது