அகிலேசு குமார் சிங்

இந்திய அரசியல்வாதி

அகிலேசு குமார் சிங் (Akhilesh Kumar Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவர். 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் உத்தரப்பிரதேச சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அகிலேசு குமார் சிங்
Akhilesh Kumar Singh
சட்டமன்ற உறுப்பினர் ரேபரேலி சட்டமன்ற தொகுதி
பதவியில்
1993–2017
முன்னையவர்அசோக் குமார் சிங்
பின்னவர்அதிதி சிங்
தொகுதி= ரேபரேலி சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1959-09-15)15 செப்டம்பர் 1959
ரேபரலி, உத்தரப் பிரதேசம்
இறப்பு20 ஆகத்து 2019(2019-08-20) (அகவை 59)
சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், இலக்னோ
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய அமைதிக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்Inter alia, அதிதி சிங்)
வாழிடம்ரேபரலி, உத்தரப் பிரதேசம், இந்தியா
முன்னாள் கல்லூரிபெரோசு காந்தி கல்லூரி, சத்ரபதி சாகுச்சி மகராச்சு பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

அகிலேசு சிங் முதன்முதலில் உத்தரபிரதேச சட்டமன்றத்திற்கு 1993 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக ரேபரேலி சதார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு இரண்டு முறை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார், அதே நேரத்தில் காங்கிரசு கட்சியுடன் தனது தொடர்பையும் தக்க வைத்துக் கொண்டார்.[1] 2007 தேர்தலுக்கு முன்னர் காங்கிரசு கட்சியிலிருந்து அகிலேசு குமார் சிங் வெளியேற்றப்பட்டார்,[2] ஆனாலும் ஓர் அரசியல் சுயேட்சையாகப் போட்டியிட்டு நான்காவது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1] இந்திய அமைதிக் கட்சியில் சேர்ந்த பின்னர் 2012 தேர்தலில் போட்டியிட்டார்.[1] ஐந்தாவது சட்டமன்ற பதவிக்காலம் முடிந்ததும், சிங்கின் மகள் அதிதி 2017 ஆம் ஆண்டில் தனது தந்தையின் இடத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார், அவர் காங்கிரசு கட்சியில் நின்று வெற்றி பெற்றார்.[3][4]

பிற்கால வாழ்க்கையில், சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் நாளன்று சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெறும்போது நோயால் இறந்தார் [5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலேசு_குமார்_சிங்&oldid=3972317" இலிருந்து மீள்விக்கப்பட்டது