ரேபரலி
ரேபரேலி (Raebareli) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் சாய் ஆற்றின் கரையில் உள்ளது.[3]ரேபரேலி மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கில் 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ரேபரேலி லக்னோ - அலகாபாத் இடையே செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ரேபரேலி நகரத்தின் மக்கள் தொகை 1,91,316 ஆகும்.[4]
ரேபரேலி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°13′25″N 81°14′25″E / 26.22361°N 81.24028°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ரேபரேலி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ரேபரேலி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 43 km2 (17 sq mi) |
ஏற்றம் | 110 m (360 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 1,91,316 |
• அடர்த்தி | 739/km2 (1,910/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
• எழுத்தறிவு | 81% |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 229 001 |
தொலைபேசி குறியீடு | 0535 |
வாகனப் பதிவு | UP-33 |
பாலின விகிதம் | 915 பெண்களுக்கு /1000 ஆண்கள் |
வானூர்தி நிலையம் | ஃபர்சத்கஞ்ச் விமானதளம் |
இணையதளம் | raebareli |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரேபரேலி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,91,316 ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 99,903 மற்றும் 91,413 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 20,140 ஆகும். சராசரி எழுத்தறிவு 81.23 % ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 27,747 மற்றும் 234 ஆகவுள்ளனர்.[5] இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 73.95 %, இசுலாமியர்கள் 24.67%, சீக்கியர்கள் 0.71 % மற்றும் பிறர் 0.40% ஆக உள்ளனர்.இதன் மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 27,747 மற்றும் 234 ஆகவுள்ளனர்.[6]
கல்வி
தொகு- அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ரேபரேலி
- காலணி வடிவமைப்பு & மேம்பாட்டு நிறுவனம், ரேபரேலி
- தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி, ரேபரேலி
- பெரோஸ் காந்தி பொறியியல் & தொழில்நுட்ப நிறுவன வளாகம், ரேபரேலி
- ரேபரேலி மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
- பெரோஸ் காந்தி கல்லூரி, ரேபரேலி
- தேசிய மருந்தியியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம், ரேபரேலி
பிற நிறுவனங்கள்
தொகு- இந்திரா காந்தி ராஷ்டிரிய நகர அகாதமி (IGRUA)
- இராஜிவ் காந்தி தேசிய பறப்புப் பல்கலைக்கழகம் (RGNAU)
- இராஜிவ் காந்தி பெட்ரேலிய தொழில்நுட்ப நிறுவனம் (RGIPT)
- காலணி வடிவமைப்பு & மேம்பாட்டு நிறுவனம், ரேபரேலி (FDDI)
- நவீன தொடருந்துப் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை, ரேபரேலி[7][8]
போக்குவரத்து
தொகுரேபரேலி சந்திப்பு தொடருந்து நிலையம், வாரணாசி-ரேபரேலி-லக்னோ மற்றும் லக்னோ-ரேபரேலி -அலகாபாத் செல்லும் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது.[9]
படக்காட்சிகள்
தொகு-
நவீன தொடருந்துப் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி
-
காலணி வடிவமைப்பு & மேம்பாட்டு நிறுவனம்
மேற்கோள்கள்கள்
தொகு- ↑ "Raebareli City" (PDF).
- ↑ 2.0 2.1 "Uttar Pradesh (India): State, Major Agglomerations & Cities – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ Nevill, H.R. (1905). Rai Bareli: A Gazetteer, Being Volume XXXIX Of The District Gazetteers Of The United Provinces Of Agra And Oudh. Allahabad: Government Press. pp. 204–11. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
- ↑ "Census of India 2011: Uttar Pradesh District Census Handbook - Rae Bareli, Part A (Village and Town Directory)" (PDF). Census 2011 India. pp. 34–63, 573–92. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
- ↑ Rae Bareli City Population 2011
- ↑ Rae Bareli Population, Religion, Caste, Working Data Rae Bareli
- ↑ "Setup Wheel Plant". Business Standard India. Press Trust of India. 9 February 2020. https://wap.business-standard.com/article/pti-stories/rinl-conducts-hot-trial-of-forged-wheel-line-at-raebareli-unit-120020900762_1.html.
- ↑ "MP Birla Plant". birlacorporation.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
- ↑ "Sonia launches radio channel, roads, rail line in Rae Bareli". The Hindu. 2 December 2013. http://www.thehindu.com/news/national/other-states/sonia-launches-radio-channel-roads-rail-line-in-rae-bareli/article5414810.ece.
வெளி இணைப்புகள்
தொகு- Official website of Raebareli பரணிடப்பட்டது 2010-02-28 at the வந்தவழி இயந்திரம்