தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி (National Institute of Fashion Technology, NIFT) இந்தியாவின் முதன்மையான ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனமாகும். 1986ஆம் ஆண்டு இந்திய அரசின் துணித்துறை அமைச்சகத்தினால் நிறுவப்பட்ட இந்த கல்லூரிகள் வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் முதன்மையான தொழில்சார் வல்லுனர்களை உருவாக்கி பன்னாட்டு உடையலங்கார வணிகத்தில் முன்னிலை எடுக்க வழிகோலியுள்ளன. 2006ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் இவற்றிற்கு சட்டபூர்வ நிலை வழங்கி பட்டங்களையும் பிற கல்வி சிறப்புகளையும் வழங்கவும் தகுதி கொடுத்துள்ளது.
வகை | பொதுத்துறை |
---|---|
உருவாக்கம் | 1986 |
அமைவிடம் | புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, காந்திநகர், ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ரேபரேலி, பட்னா, சில்லாங், போபால், தலிபரம்பா, புவனேசுவர், காங்ரா மற்றும் ஜோத்பூர் , |
வளாகம் | ஊரகம் |
சுருக்கப் பெயர் | என்ஐஎப்டி |
சேர்ப்பு | துணித்துறை அமைச்சகம், இந்திய அரசு |
இணையதளம் | www.nift.ac.in |
இந்தக் கழகம் உடையலங்கார தொழிலில் கல்வி வழங்க பதினான்கு உள்நாட்டு மையங்களை புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, காந்திநகர், ஐதராபாத், சென்னை, பெங்களூரு, ரேபரேலி, பட்னா, சில்லாங், போபால், தலிபரம்பா, புவனேசுவர், காங்ரா மற்றும் ஜோத்பூரில் அமைத்துள்ளது. மொரிசியசில் பன்னாட்டு மையமொன்றை நிறுவியுள்ளது.
வெளியிணைப்புகள்
தொகு- அலுவல்முறை இணையதளம் பரணிடப்பட்டது 2009-11-19 at the வந்தவழி இயந்திரம் (இந்தியில்)
- NIFT அலுவல் இணையதளம்
- NIFT அலும்னி நெட்வொர்க் பரணிடப்பட்டது 2010-04-13 at the வந்தவழி இயந்திரம்