அகுஸ்டோ ரொவ பாஸ்டோ

அகுஸ்டோ ரொவ பாஸ்டோ (Spanish:Augusto Roa Bastos)(ஜூன் 12, 1917 - ஏப்ரல் 26, 2005) பரகுவை நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். தமது பதின்ம வயதுகளில் பராகுவே, பொலிவியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற சாக்கோ போரில் பங்கெடுத்தவர்[1]. பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக தமது பணியைத் தொடங்கி வசனகர்த்தாவாகவும், பேராசிரியராகவும் பணியாற்றியவர். அவருடைய யோயி சுப்பிரிமோ ( Yo el supremo ) என்ற சிக்கலான கதைக்களம் கொண்ட நாவல் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒன்றாகும். அவர் 1989-யில் ஸ்பானிய மொழியில் மிகவும் கௌரவமான இலக்கிய விருது என அறியப்படும் பிரமியோ மிகுத்தே சர்வாந்தீஸ் (Premio Miguel de Cervantes) என்ற விருதையும் அவர் பெற்றார். யோயி சுப்பிரிமோ நாவலில் அகுஸ்டா 1814-யிலிருந்து 1840 வரையில் பரகுவையை ஆட்சி செய்த கொடுங்கோலன் யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியாவின் பேச்சு மொழியையும் சிந்தனையையும் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்.  

அகுஸ்டோ ரொவ பாஸ்டோ
Augusto Roa Bastos Edit on Wikidata
பிறப்பு13 சூன் 1917
அசுன்சியோன்
இறப்பு26 ஏப்பிரல் 2005 (அகவை 87)
அசுன்சியோன்
பணிபத்திரிக்கையாளர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், கவிஞர்
வேலை வழங்குபவர்
  • University Toulouse - Jean Jaurès
சிறப்புப் பணிகள்I the Supreme
விருதுகள்Kurt Tucholsky Prize, Commandeur des Arts et des Lettres‎, Knight of the Legion of Honour, Officer of Arts and Letters, Guggenheim Fellowship, National Order of Merit, Order of José Martí, Order of the Liberator General San Martín, Ordre des Arts et des Lettres, Q126416281Kategori:Articles without Wikidata information

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுஸ்டோ_ரொவ_பாஸ்டோ&oldid=2734171" இலிருந்து மீள்விக்கப்பட்டது