அகோன் போரா

இந்திய அரசியல்வாதி

அகான் போரா (Akon Bora) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் அசாம் சட்டமன்றத் தேர்தலில் திசுப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

அகான் போரா
Akon Bora
ஒரு சொற்பொழிவின் போது அகான் போரா
உறுப்பினர், அசாம் சட்டப் பேரவை
சட்டமன்ற உறுப்பினர் Member
திசுப்பூர்
பதவியில்
2006–2016
முன்னையவர்இராபின் போர்தலோய்
சமூக நலன் மற்றும் சிறைத்துறை அமைச்சர், அசாம் அரசாங்கம்
பதவியில்
2011–2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 திசம்பர் 1952 (1952-12-01) (அகவை 72)
மாச்சூலி, அசாம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்(கள்)பருல் போரா, 3 மார்ச்சு 1975
பிள்ளைகள்2
வாழிடம்(s)சியூச்சு நகர், பெல்டோலா]], குவகாத்தி, அசாம்
கல்விஇளநிலை அரசியல் அறிவியல்

போரா அசாம் மாநிலத்தின் மச்சூலியில் தர்மேசுவர் போரா மற்றும் தோய்பாகி போரா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]

தொழில்

தொகு

1986 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராகவும், வடகிழக்கு காங்கிரசு ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளராகவும், அனைத்திந்திய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். பல்வேறு பிகூ கமிட்டி, சமூக குழுக்கள், மந்திர் கமிட்டிகள் மற்றும் தனியார் அமைப்புகளில் புரவலர் மற்றும் ஆலோசகராகவும் உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அவர் 3 மார்ச் 1975 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதியன்று பருல் போராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். [1] போரா குவகாத்தியில் உள்ள பெல்டோலாவில் உள்ள சியூச்சு நகரில் வசித்து வந்தார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Who's Who". பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  2. "Assam Legislative Assembly – Members of Current Assembly". பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோன்_போரா&oldid=3968058" இலிருந்து மீள்விக்கப்பட்டது