மாஜுலி (ஒலிப்பு: ˈmʌʤʊlɪ) (அசாமியம்:মাজুলী}}, ஆங்கிலம்:Majuli) [1] என்பது உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும்[2]. இந்த தீவு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றினால் நாலாபுறமும் சூழப்பட்ட இந்த நிலப்பகுதி 352 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அசாம் அரசு மாஜுலி பகுதியை மாவட்டமாக தரமுயர்த்தியுள்ளது. இதனையடுத்து இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மாஜுலி உதயமானது.[3] அசம் தலைநகரான குவாஹாட்டியில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த தீவில் சுமார் 144 கிராமங்கள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 1,50,000 மக்கள் வாழ்கின்றனர்.

மாஜுலி
உள்ளூர் பெயர்: মাজুলী
தோரியா ஆறு, மாஜுலி.
புவியியல்
அமைவிடம்பிரம்மபுத்திரா ஆறு
ஆள்கூறுகள்26°57′0″N 94°10′0″E / 26.95000°N 94.16667°E / 26.95000; 94.16667
பரப்பளவு1,250 km2 (480 sq mi)
உயர்ந்த ஏற்றம்84.5 m (277.2 ft)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்மாஜுலி (மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நாள்:செப்டம்பர் 8, 2016)
பெரிய குடியிருப்புகர்மூர் சத்திரா
மக்கள்
மக்கள்தொகை167,304 தோராயமாக (2011)
அடர்த்தி300 /km2 (800 /sq mi)
இனக்குழுக்கள்Mishing, Deori, Sonowal Kacharis minority groups - Ahom, Chutia, Kalita
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN785102, 785104, 785105, 785110
Telephone code03775
வாகனப் பதிவுAS-03
அதிகாரபூர்வ இணையதளம்majulimap.com

சுற்றுலா

தொகு

ஜோர்ஹாட்டில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள பறவைகளைக் காணவும், பழங்குடியினரின் கைவினைப் பொருட்களை வாங்கவும், தீவினை சுற்றிப்பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

அரசியல்

தொகு

இந்த மாவட்டம் மாஜுலி சட்டமன்றத் தொகுதிக்கும் லக்கிம்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Official Website
  2. "Assam's Majuli to become India's first island district today".
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=1603155
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஜுலி&oldid=3890739" இலிருந்து மீள்விக்கப்பட்டது