அக்கம்மா தேவி

இந்திய அரசியல்வாதி

அக்கம்மா தேவி (1918 – 2012) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.


அரசியல் வாழ்வு தொகு

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.1962 ஆம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். இவர் அந்தத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார்.    

பின்னணி தொகு

கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற முதல்  படுகர் இனப் பெண்மணி அக்கம்மா தேவி  ஆவார்.[1] 1962 முதல் 1967 வரை நீலகிரி மக்களவைத் தொகுதியின்  மக்களவை பிரதிநிதியாகப் பணியாற்றினார். இவர் இப்பதவியை பெற்ற முதல் பெண்மணி. அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போது தமிழ்நாடு) முதலமைச்சராக இருந்த காமராசர் அக்கம்மா தேவியை மக்களவைப் பிரதிநிதியாக தேர்வு செய்தார்.[1]

இறப்பு தொகு

இவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு தனது 94 வயதில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள அப்பத்தாலா எனும் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கம்மா_தேவி&oldid=3163389" இலிருந்து மீள்விக்கப்பட்டது