அக்கார் ஆளுநரகம்
அக்கார் கவர்னரேட் (Akkar Governorate அரபு மொழி: محافظة عكار ) என்பது லெபனானின் வடக்கே உள்ள ஒரு ஆளுநரகமாகும் . இது ஒற்றை மாவட்டமான அக்காரைக் கொண்டுள்ளது.[2] இதையொட்டி 121 நகராட்சிகள் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் தலைநகரம் ஹல்பாவில் உள்ளது. இது 788 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக மேற்கில் மத்தியதரைக் கடல், தெற்கே வடக்கு ஆளுநரகம், தென்கிழக்கில் பால்பெக்-ஹெர்மல் ஆளுநரகம், வடக்கிலும், வடகிழக்கிலும் சிரிய ஆளுநரகங்களான டார்ட்டஸ் மற்றும் ஹோம்ஸின் ஆகியவை உள்ளன. ஆளுநரகத்தின் மேற்கு கடலோர சமவெளியானது பெக்கா பள்ளத்தாக்குக்குப் அடுத்து லெபனானின் இரண்டாவது பெரிய விவசாயப் பகுதியாகும். ஆளுநரகத்தின் கிழக்கில் காடுகள் நிறைந்த மலைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க தேசிய பூங்காவாக கருதப்படுகின்றன.[3]
அக்கார்
محافظة عكار Gouvernorat de l'Akkar | |
---|---|
லெபனானில் அக்கார் ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°30′N 36°12′E / 34.5°N 36.2°E | |
நாடு | லெபனான் |
மாவட்டங்கள் | அக்கார் மாவட்டம் |
உருவாக்கம் | 2014 |
தலைநகரம் | ஹல்பா, லெபனான் |
அரசு | |
• ஆளுநர் | இமாத் லபாகி |
பரப்பளவு | |
• மொத்தம் | 788 km2 (304 sq mi) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2015 சூன்)[1] | 3,89,899 |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.) |
சிரிய உள்நாட்டுப் போரின் பதிவுசெய்யப்பட்ட 106,935 அகதிகள் மற்றும் 19,404 பாலஸ்தீனிய அகதிகள் உட்பட 2015 ஆம் ஆண்டில் ஆளுநரகத்தின் மொத்த மக்கள் தொகை 389,899 என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் மதிப்பிட்டுள்ளது. மக்கள்தொகையில் பெரும்பாலும் சுன்னி முஸ்லீம்களில் 70-75% பேரும், சிறுபான்மை கிறிஸ்தவ மற்றும் அலவைட் சமூகங்கள் மற்றும் மிகக் குறைந்த ஷியாக்களுடன் உள்ளனர். அக்கார் லெபனானின் குறைந்த அளவு நகரமயமாக்கப்பட்ட ஆளுநரகமாகும். இதன் மக்களில் 80% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.[4]
2003 சூலை 16 இல் சட்டம் 522 இயற்றப்பட்டதன் மூலம் அக்கார் கவர்னரேட் உருவாக்கப்பட்டது. இதற்காக வடக்கு ஆளுநரகத்திலிருந்து அக்கார் மாவட்டம் பிரிக்கப்பட்டது.[5] ஆளுநரகத்தின் முதல் மற்றும் தற்போதைய ஆளுநரான இமாத் லபாகி நியமனம் செய்யப்பட்டதன் மூலம் புதிய ஆளுநரகத்தின் செயல்பாடானது 2014 இல் தொடங்கியது, என்றாலும் இச் செயல்பாடானது as of 2017[update] வரைகூட முழுமையடையாது உள்ளது. வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்டு மத்திய அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட அக்கார் பிராந்தியமானது லெபனானின் ஏழ்மையான பகுதியாகவும், நாட்டின் கல்வியறிவின்மை விகிதம் மிகுந்த பகுதியாகவும் உள்ளது. மேலும் அடிப்படை உள்கட்டமைப்பு குறைபாட்டால் அவதிப்படுகிறது.[4] சிரிய அகதிகளின் அண்மைய வருகை இந்த பிரச்சினைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஆளுநரகத்தின் வேலையின்மை விகிதம் 2015 இல் கிட்டத்தட்ட 60% ஐ எட்டியுள்ளது.[6]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Akkar Governorate Profile". UNHCR. June 2015. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
- ↑ "Mohafazah de Aakkar". Localiban. Archived from the original on 26 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Towards a National Park in Upper Akkar" (PDF). Mada. March 2009. Archived from the original (PDF) on 13 September 2016. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
- ↑ 4.0 4.1 Mouchref, Aicha (January 2008). "Forgotten Akkar: Socio-Economic Reality of the Akkar Region" (PDF). Mada. Archived from the original (PDF) on 10 September 2016. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
- ↑ "Territorial administration of Lebanon". Localiban. Archived from the original on 8 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
- ↑ "North and Akkar Governorates Profile". UNHCR. 2016. Archived from the original on 26 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)