அக்யானா
அக்யானா (Akhyana) என்பது ஒரு பாரம்பரிய இசை நாடகமாகவும், குஜராத்தி கவிதை மற்றும் ராஜஸ்தானி கவிதைகளின் இடைக்கால வகையாகவும் இருந்தது. [1] இது முதன்மையாக இந்தியாவின் குசராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நடைமுறையில் இருந்தது.
சொற்பிறப்பியல்
தொகுஅக்யானா என்பது சமசுகிருதத்தில் சொல்வது அல்லது விவரிப்பது என்று பொருள் தருகிறது. 12 ஆம் நூற்றாண்டின் பலமொழி நிபுணரான ஹேம்சந்திரா தனது காவ்யானுசாசனத்தில் அக்யானாவை வரையறுத்தார். பாடல்களிலும் நடிப்பிலும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்துவதற்காக கிரந்திகா என்பவர் (தொழில்முறை கதை சொல்பவர்) விவரித்த மத நூல்களின் பக்கக் கதையாக இதை வகைப்படுத்தினார். இந்த வரையறையில் நரசிங் மேத்தா போன்றவர்களிலின் புராணமற்ற கதைகளின் கதை இல்லை. பொதுவாக, பாட்டும் நடிப்பும் சேர்ந்து பார்வையாளர்களுக்கு மத அறிவுறுத்தல்களுக்காக கதை சொல்பவர் விவரிக்கும் கதைகள் என்று அக்யானாவை வரையறுக்கலாம். குசராத்தி கவிஞரும் விமர்சகருமான தோலராய் மன்கட் இதை இசைக் கூறுகள் மற்றும் நடிப்பின் நோக்கம் கொண்ட கவிதை வடிவமாக வரையறுத்தார். [1]
நிகழ்த்துபவர்
தொகுஅகியானாக்களைப் பாராயணம் செய்த கதை அல்லது தொழில்முறை கதைசொல்லிகள் மனாபட் அல்லது ககாரியா-பட் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் இசைத்துக்கொண்டும் நடித்தும் கதையைச் சொல்வர்கள். அவர்கள் விரல்களில் வெள்ளி அல்லது செப்பு மோதிரங்களை அணிந்திருப்பர். அவை தாமிரத்தால் தயாரிக்கப்பட்ட குடம் அல்லது பெரிய உலோகப் பானை மீது குறுகிய வாய் மற்றும் நடுப்பகுதியில் தாளங்களை ஒலிக்கப் பயன்படுத்தப்பட்டன. மனா அல்லது காகர் என்றால் குஜராத்தி மொழியில் பானை என்று பொருள். [1][2][3] மேலும், கைம்முரசு இணை , ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகளும் உடன் இசைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi. pp. 28, 29, 121–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126018038.
- ↑ Mukherjee, Sujit (1999). A Dictionary of Indian Literature: Beginnings-1850. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125014535.
- ↑ "Dharmiklal Pandya struggles to save dying art of Gujarat Manbhat Akhyan". India Today 12012004. 12 January 2004. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.