அங்கதன் வாலியின் மகன்.[1] சீதை இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடிக்குமாறு, சுக்ரீவனால் அனுப்பப்பட்டவர்களில் இவனும் ஒருவன். போருக்கு முன்னர் இராவணனிடம், இராமரால் தூதுவனாக அனுப்பப்பட்டவன். [2]

போருக்கு முன்னர் இராமரின் அறிவுரைப் படி, சீதையை இராமரிடம் திருப்பி அனுப்ப அங்கதன் இராவணனிடம் தூதராக செல்லுதல்

இராம-இராவணப் போரில், இரட்டைப்பிறவிகளான நராந்தகன் மற்றும் தேவாந்தகனை, வானர இளவரசனான அங்கதன் கொல்கிறார்.

போர் முடிந்த பிறகு, கிஷ்கிந்தையின் இளவரசனாக ராமரால் முடி சூட்டப்பட்டவன்.

ராம தூதனாக

தொகு

அங்கதன் ராம தூதுவனாக இலங்கைக்கு சென்றான்.[3] ராவணன் சபையில் அவன் சீதையை விடுவிக்க வேண்டும் இல்லையேல் ராமரின் சினத்திற்கு ஆளாகி விடுவாய் என்றும் முதலில் ராமரை வெல்வதற்கு முன்பு என் காலை அசைக்க முடியுமா என உரைத்தான் கோபமுற்ற இராவணனின் மகன் மேகநாதன் (இந்திரஜித்) முயற்சித்து தோல்வியுற்றான்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. அங்கதன். தினமலர். 30 மார்ச் 2012. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. அங்கதன் தூதுப் படலம்
  3. பி.என்.பரசுராமன் (16 செப்டம்பர் 2019). அங்கதன். குங்குமம் -ஆன்மிகம். {{cite book}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கதன்&oldid=3832502" இலிருந்து மீள்விக்கப்பட்டது