அங்காடிபுரம்
இந்திய நகரம்
அங்காடிபுரம் (Angadipuram, மலையாளம்: അങ്ങാടിപ്പുറം) என்பது கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணைக்கு 1.5 கிலோமீட்டர் அருகில் உள்ள சிறிய கிராமம். திருமாந்தாங்குன்னு கோயில், தாளியம்பலம் ஆகியன அருகில் உள்ள ஆலயத் தலங்கள்.[1]
— கிராமம் — | |
ஆள்கூறு | 10°58′47″N 76°11′39″E / 10.9798100°N 76.1941220°E |
மாவட்டம் | மலப்புறம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வள்ளுவநாடு அரசின் அரசர்கள் திருமாந்தாங்குன்னு கோயிலைக் கட்டினர். வள்ளுவநாட்டு அரசர்களின் தெய்வமான பகவதியை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். வள்ளுவநாட்டின் தலைநகராகவும் இது விளங்கியது. இங்கு அய்யப்பன், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகியோருக்கான கோயில்களும் உள்ளன.
சொர்ண்ணூர் - நிலம்பூர் ரயில்வே வழியில் உள்ள அங்காடிபுரம் ரயில்வே ஸ்டேஷன் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்டது.
சான்றுகள்
தொகு- ↑ "மலப்புறம் மாவட்டம் - கோயில்கள்". Malapurram.nic.in. Archived from the original on 2006-09-06. பார்க்கப்பட்ட நாள் 2006-10-13.