அங்கீதா

இந்திய நடிகை

அங்கீதா (Ankitha) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்களில் சில தமிழ் மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார்.

அங்கீதா ஜாவேரி
பிறப்புஅங்கீதா ஜாவேரி[1]
27 May 1982 [2]
பிரீச் கேண்டி, மும்பை, இந்தியா
பணிநடிகை ; தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003–2012
வாழ்க்கைத்
துணை
விஷால் ஜக்தாப் (தி. 2016)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2016 மார்ச்சில், அங்கிதா மும்பையைச் சேர்ந்தவரும், தற்போது நியூ ஜெர்சியில் உள்ளவரும், சிட்டி வங்கியைச் சேர்ந்த விஷால் ஜக்தாப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். [3]

தொழில்

தொகு

1980 களில் இந்தியாவில் தேசிய தொலைக்காட்சியில் ரஸ்னா இனிப்பு பான விளம்பரப் படத்தில் குழந்தை நடிகராக அங்கீதா அறிமுகமானார். மேலும் குழந்தை நட்சத்திரமாக "ரஸ்னா பேபி" என்று அழைக்கப்பட்டார். [4] [5] ஜூனியர் என்டிஆர் நடித்த சிம்மாஹாத்ரி படத்தில் நடித்தபிறகு இவரது நடிப்பு வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது. [6] 2005 ஆம் ஆண்டில் இவர் தமிழ் திரைப்படங்களில் தோன்றினார். சுந்தர் சி., இயக்கி பிரசாந்த் நடித்த லண்டன், அதன்பிறகு புதுமுகம் யுவகிருஷ்ணாவுடன் தகதிமிதா போன்ற படங்களில் நடித்தார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
2002 லஹிரி லஹிரி லஹிரிலோ பிரியா தெலுங்கு
தனலட்சுமி ஐ லவ் யூ தனலட்சுமி
பிரேமலோ பவானி கல்யாண் பார்வதி
2003 சிறீராம் கன்னடம்
சிம்மாஹாத்ரி கஸ்தூரி தெலுங்கு
2004 அந்தரு தொங்கலே தொரிகிதே உசா
விஜயவாடா வர்மா வெங்கடலட்சுமி
2005 மனசு மாட்ட வினாடு அனு
லண்டன் அஞ்சலி தமிழ்
தகதிமிதா காயத்திரி
2006 ராராஜு தெலுங்கு
கடர்னாக் சிறப்புத் தோற்றம்
சீதாராமுடு அஞ்சலி
2007 திரு ரங்கா சிறீ தமிழ்
ஜுலாய் சுருதி தெலுங்கு
நவ வசந்தம் பிரியா
அனுசுயா
2008 ராஜா ராஜா சர்வானி
2009 சுனாமி 7x
போலிஸ் அதிகாரி

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  2. "Birthday 2007 - Ankita". பார்க்கப்பட்ட நாள் 29 May 2012.
  3. kavirayani, suresh (2015-11-08). "Rasna girl Ankita to tie the knot". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  4. http://www.indiaglitz.com/channels/telugu/article/46590.html
  5. Krishnankutty, Pia (2020-05-30). "The Rasna girl who stole hearts one '80s ad at a time". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  6. "Actress Ankitha engaged - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கீதா&oldid=3682676" இலிருந்து மீள்விக்கப்பட்டது