அசர்பைசான் ஏர்லைன்சு பறப்பு 8243

அசர்பைசான் ஏர்லைன்சு பறப்பு 8243 (Azerbaijan Airlines Flight 8243) என்பது அசர்பைசானின் பாகுவிலிருந்து உருசியாவின் குரோசுனிக்கு திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் வானூர்தியாகும். இது அசர்பைசான் வான்சேவை நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. 25 டிசம்பர் 2024 அன்று, இந்த வானூர்தி சேவையை இயக்கும் எம்ப்ரேயர் E190, உள்ளூர் ஆதாரங்களின்படி 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் கசக்கஸ்தானின் அக்தாவ் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.[1][2][3] வானூர்தியானது பாகுவிலிருந்து உருசிய குடியரசின் செச்சினியாவில் உள்ள குரோசுனிக்கு பறந்து கொண்டிருந்ததாகவும், ஆனால் குரோசுனியில் மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்டதாகவும் உருசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. வானூர்தி அதன் டிரான்ஸ்பாண்டரில் 7700 ஐ ஸ்குவாக் செய்ததாகக் கூறப்படுகிறது, காஸ்பியன் கடலின் மீது பறக்கும் போது அவசரநிலை எச்சரிக்கையை விடுத்தது, உருசியாவின் வானூர்திப் போக்குவரத்து அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் முதற்கட்ட அறிக்கைகள் இந்த சம்பவம் பறவை தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன, உயிர் பிழைத்தவர்கள் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும் சிதறிய துண்டுகள் வானூர்தியைத் தாக்கியதாகவும் தெரிவித்தனர்.[4][5] இந்த விபத்தில் வானூர்தி ஓட்டிகள் உட்பட மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர்.[6] 29 பேர் உயிர் தப்பினர்.[7][8][9]

அசர்பைசான் ஏர்லைன்சு பறப்பு 8243
விபத்துக்குள்ளான வானூர்தி 4K-AZ65
Accident சுருக்கம்
நாள்25 திசம்பர் 2024
சுருக்கம்நெருக்கடிநிலைத் தரையிறக்கத்தின் போது நொறுங்கியது
இடம்கசக்கஸ்தானின் அக்தாவில் உள்ள அக்தாவ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
43°53′0.741″N 51°0′21.843″E / 43.88353917°N 51.00606750°E / 43.88353917; 51.00606750
பயணிகள்62
ஊழியர்5
காயமுற்றோர்29
உயிரிழப்புகள்38
தப்பியவர்கள்29
வானூர்தி வகைஎம்ப்ரேயர் 190 ஏஆர்
வானூர்தி பெயர்குசார்
இயக்கம்ஆசர்பைசான் வான்சேவை நிறுவனம்
வானூர்தி பதிவு4K-AZ65
பறப்பு புறப்பாடுஏய்தார் அலியேவ் பன்னாட்டு வானூர்தி நிலையம், பக்கூ, அசர்பைசான்
சேருமிடம்கேட்யிரோவ் குரோன்சி பன்னாட்டு வானூர்தி நிலையம், செச்சினியா, உருசியா

பின்னணி

தொகு

வானூர்தி

தொகு

2013 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த வானூர்தி, 4K-AZ65 என பதிவுசெய்யப்பட்ட ஒரு எம்ப்ரேயர் E190AR ஆகும், இதன் வரிசை எண் 19000630 உடன் குசார் என்று பெயரிடப்பட்டது.[10] இது இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் CF 34-10 E6 பொறிகளால் இயக்கப்படுகிறது, இந்த வானூர்தி தனது கடைசி பராமரிப்புக்கு அக்டோபர் 18,2024 அன்று சென்றுள்ளது.[11] 24 சூலை 2013 அன்று தனது முதல் வானூர்திச் சேவையைத் தொடங்கியது மற்றும் அசர்பைசான் வான்சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது. சூலை 2013 முதல் தொடங்கிய இதன் சேவையில், இந்த விமானம் 2017 முதல் 2023 வரை வானூர்தியின் குறைந்த கட்டண மெய்நிகர் வானூர்தி துணை நிறுவனமான பூட்டா ஏர்வேஸின் கீழ் பறந்ததைத் தவிர, அசர்பைசான் வான்சேவை வானூர்தி நிறுவனத்தால் இயக்கப்பட்டது.[12][13] விபத்தின் போது இந்த வானூர்தி 11.6 ஆண்டுகள் பழமையானது.[14]

பயணிகள் மற்றும் பணியாளர்கள்

தொகு

இந்த வானூர்தியில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்தனர். முப்பத்தேழு பேர் அசர்பைசான் குடிமக்கள், 16 பேர் உருசிய குடிமக்கள். 6 பேர் கசகஸ்தானிய குடிமக்கள் மற்றும் 3 பேர் கிர்கிஸ் குடிமக்கள் ஆவர். மீதமுள்ள ஐந்து பேர் வானூர்தி சேவை உறுப்பினர்கள், அவர்கள் அனைவரும் அசர்பைசானியர்கள்.[15] நான்கு சிறுவர்கள் வானூர்தியில் இருந்தனர்.[16] வானூர்தியில் இருந்த 67 பேரில், 29 பேர் உயிர் தப்பினர், 38 பேர் இறந்தனர். ஐந்து பணியாளர்களில் மூன்று பேர் உயிர் தப்பினர், அதே நேரத்தில் இரண்டு வானூர்தி ஓட்டிகளும் விபத்தில் இறந்தனர்.[17] விபத்தைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.[18][19] அவர்களில் பதினொரு பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர்.[20][21] கேப்டன் இகோர் இக்சன்யாகின் வானூர்தி ஓட்டியாக இருந்தார்.

தேசிய இனங்கள்
நாடு பயணிகள் வானூர்திப் பணியாளர்கள் மொத்தம் உயிர் பிழைத்தோர் மேற்கோள்கள்
அசர்பைஜான் 37 5 42 17 [22][23]
கசக்கஸ்தான் 6 பொருத்தமில்லை 6 0 [22][23]
கிர்கிசுத்தான் 3 பொருத்தமில்லை 3 3 [22][23][24]
உருசியா 16 பொருத்தமில்லை 16 9 [22][23]
மொத்தம் 62 5 67 29

இந்த வானூர்தி பாகு சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து அசர்பைசான் நேரப்படி (யுடிசி +04.00) குரோஸ்னி வானூர்தி நிலையத்திற்குப் புறப்பட்டது. வானூர்தி கண்காணிப்பு சேவை ரேடார் 24 இன் கூற்றுப்படி, குரோஸ்னி அருகே பறக்கும் போது வானூர்தி "வலுவான புவியிடங்காட்டி நெரிசல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு ஆளாகியது". புவியிடங்காட்டி நெரிசல் என்பது நீண்ட தூர வானூர்திகளில் அறியப்பட்ட பிரச்சினையாக இருந்து வருகிறது. மேலும், உருசிய வான்வெளியில் நுழையும் போது இது எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நெரிசல்களைக் கையாள பல சரிபார்ப்பு பட்டியல்கள் செய்யப்பட்டுள்ளன .

குரோஸ்னியில் மோசமான வானிலை காரணமாக வானூர்தி உருசியாவின் தாகெஸ்தானில் உள்ள மகக்கலாவின் உயாஷ் வானூர்தி நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், மகக்கலாவில் வானிலை மோசமாக இருந்தது, அங்கும் வானூர்தி தரையிறங்க முடியவில்லை, கசகஸ்தானின் அக்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.[25] வானூர்தி சுமார் 30,000 அடி (9,144 மீ) உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரமான 08:40 மணியளவில் ரேடார் கண்காணிப்பிலிருந்து காணாமல் போனது, பின்னர் உள்ளூர் நேரமான 10:07 மணியளவில் மீண்டும் கஜகஸ்தான் கடற்கரையில் தோன்றியது.[26]

உள்ளூர் நேரப்படி 09.35 மணியளவில் 7700 ஐ அதன் டிரான்ஸ்பாண்டரில் ஸ்குவாக் செய்வதன் மூலம் குழுவினர் ஒரு துயர சமிக்ஞையை வழங்கியதோடு கட்டுப்பாட்டு அமைப்பு தோல்வியடைந்ததாகத் தெரிவித்தனர். பின்னர் 09:49 மணியளவில், வானூர்தி ஓட்டிகள் கஜகஸ்தானின் அக்தாவில் உள்ள அக்தாவ் பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கக் கோரினர், மேலும், அதை நேரடி பயன்முறையில் செய்ய முயன்றனர். வானூர்தி பின்னர் ரேடாரில் மீண்டும் தோன்றியது, காஸ்பியன் கடலின் மீது அக்தாவை நோக்கிப் பறந்து, அதன் வழக்கமான வானூர்திப் பாதையில் இருந்து கணிசமாக விலகிச் சென்றது.[27] 10:28 மணிக்கு, வானூர்தி தரையில் மோதியது, அதன் வலது விங் முதலில் தாக்குதலுக்குள்ளானது. பின்னர் அது இடிந்து விழுந்து, வெடித்து, இரண்டு பெரிய துண்டுகளாக உடைந்தது. இந்த வெடிப்பும் வானூர்தி விபத்துக்குள்ளான பிறகு ஏற்பட்ட தீ விபத்தும் சேர்ந்து வானூர்தியின் முன் பகுதியை அழித்தன. வானூர்தியின் வால் பகுதி பிரதான இடிபாடுகளிலிருந்து தலைகீழாக கீழே வந்து பெரும்பாலும் அப்படியே இருந்தது. இந்த விபத்து காணொலியாகப் பதிவு செய்யப்பட்டது, இது விமானம் தரையில் மோதியபோது தரையிறங்கும் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டதைக் காட்டியது.[28]

ரோஸாவியாட்சியாவின் முதற்கட்ட தகவல்கள் அவசர தரையிறக்கத்திற்கான கோரிக்கை பறவைகளின் மந்தையுடன் மோதியதே காரணம் என்று பரிந்துரைத்தன. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் வால் மேற்பரப்பில் குறிப்பிடத்தக்க துளைகளைக் காட்டியது, மேலும் விபத்தில் இருந்து தப்பியவர்கள் ஒரு வெடிப்பைக் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வானூர்தி மற்றும் சில பயணிகளை சிதறுண்ட துண்டுகள் தாக்கியதாகவும் தெரிவித்தனர்.[29][30] வானூர்திக் குழுவினர் முதலில் பறவைகள் மோதியதாக கருதப்பட்ட ஒன்றினால் விமானத்தின் உடல் பகுதியில் வலுவான தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் கஜகஸ்தானின் அவசர சேவைகள், வானூர்தியில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தன.[31][32]

பின் விளைவு

தொகு

விபத்தினைத் தொடர்ந்து வானூர்தி விழுந்து நொறுங்கிய துப்காரகன் மாவட்டத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.[33] வானூர்தி விபத்து நடந்த இடத்தில் மொத்தம் 482 அவசரகால இடர்மீட்புப் பணியாளர்கள், 97 சிறப்பு உபகரணங்கள், 10 வெடிபொள்கள் ஆய்வு படைப்பிரிவினர் மற்றும் இரண்டு வானூர்திகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.[34] காயமுற்றோருக்கு சிகிச்சையளிக்க அஸ்தானாவிலிருந்து கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். மங்கிஸ்தாவ் மண்டல இரத்த மையம் பொதுமக்களை அணுகி, நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள நபர்கள் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அவ்வறிவிப்பிற்குப் பிறகு விரைவில், அக்தாவ் நகர மக்கள் இரத்த தானம் செய்வதற்காக மையத்திற்கு வந்தனர்.[35] ஏறத்தாழ 300 நபர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.[36] அஸ்தானா வாழ் குடிமக்கள் நகரின் இரத்தம் வழங்கல் மையத்தில் வரிசையில் நின்று இரத்த தானம் செய்னதர்.[37] உருசிய அவசர நிலைகள் அமைச்சகம் விபத்துக்கு உதவும் வகையில் உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கஜகஸ்தானுக்கு வானூர்தி மூலம் அனுப்பியது. சம்பவத்தில் காயமடைந்த உருசிய நாட்டவர்களை மாஸ்கோவிற்கு வானூர்தி மூலம் கொண்டு செல்வதாக அமைச்சகம் பின்னர் தெரிவித்தது.[38] உருசிய தூதரகத்தின் ஓரல் அலுவலகத்தில் அவசரகால மையம் நிறுவப்பட்டது, மேலும் தூதரக ஊழியர்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.[39] அக்தாவில் உள்ள அசர்பைஜான் தூதரக பிரதிநிதிகளும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.[40] தேவையான மருத்துவ உபகரணங்களுடன் ஒரு சிறப்பு மருத்துவக் குழுவினரும் அசர்பைசானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.[41]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Azerbaijan Airlines plane crashes near Kazakhstan's Aktau airport". Sky News. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  2. "Dozens killed as passenger plane crashes in Kazakhstan". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  3. "Azerbaijan Airlines Plane Crashes In Kazakhstan". Barron’s. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  4. "Azerbaijan Airlines plane carrying 67 passengers crashes near Aktau during emergency landing". Dimsum Daily. 2024-12-25. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  5. "Air missile accident emerges as probable cause of crash tragedy". www.euronews.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  6. "அஜர்பைஜான் விமான விபத்துக்கு பறவை மோதியது காரணமா?". தினமணி. https://www.dinamani.com/world/2024/Dec/26/azerbaijani-airliner-crashes-in-kazakhstan-killing-38-with-29-survivors-officials-say. பார்த்த நாள்: 27 December 2024. 
  7. "Prosecutor General's Office: According to latest information, 32 people onboard the aircraft are alive and receiving treatment". Apa.az. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  8. "Azerbaijan Airlines plane crashes in Kazakhstan, many feared dead". Reuters. பார்க்கப்பட்ட நாள் 25 December 2024.
  9. Hradecky, Simon (2024-12-25). "Accident: Azerbaijan E190 near Aktau on Dec 25th 2024, touched down off runway". The Aviation Herald. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  10. "Latest full technical control of aircraft, crashed near Aktau, conducted in October of this year". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  11. Kaminski-Morrow, David (25 December 2024). "Over 30 survive Azerbaijan Embraer 190 crash in Kazakhstan: ministry". Flight Global (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  12. "Ұшақ апаты: 38 адам қаза тапты. 29 жолаушы ауруханаға түскен". Азаттық радиосы. 2024-12-25. பார்க்கப்பட்ட நாள் 2024-12-26.
  13. Ferreira, Carlos (2024-12-25). "A maior parte dos sobreviventes do acidente com o Embraer no Cazaquistão estava sentada na cauda". AEROIN - Notícias de Aviação. பார்க்கப்பட்ட நாள் 2024-12-26.
  14. "Azerbaijan Airlines E190 Crashes in Kazakhstan". airwaysmag.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-26.
  15. "Number of casualties in plane crash near Aktau confirmed". apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  16. "Four minors were on board crashed AZAL aircraft, reports say". Report.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  17. "Kazakh Deputy Prime Minister: 38 killed in AZAL plane crash in Aktau". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  18. "Plane crash: Casualties and the injured, quick reaction of Azerbaijani leadership, fraternal support of Kazakhstan-RESUME". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  19. "Diaspora organization chairman: Some injured in plane crash are in critical condition, others in moderate-to-severe condition". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  20. "11 injured in AZAL plane crash in Aktau are in critical condition". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  21. "List of injured in AZAL plane crash announced". Apa.az. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  22. 22.0 22.1 22.2 22.3 "Number of Azerbaijani citizens, died in plane crash in Aktau, revealed". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-26.
  23. 23.0 23.1 23.2 23.3 "Number of casualties in plane crash near Aktau confirmed". 2024-12-25. பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  24. "Azerbaijani airliner with 67 people onboard crashes, yet dozens may have survived". Associated Press. NPR. 2024-12-25. https://www.npr.org/2024/12/25/g-s1-39977/azerbaijan-airlines-passenger-jet-crashes. 
  25. "The Aviation Herald". avherald.com.
  26. "38 Killed After Azerbaijan Airlines Plane Crashes in Kazakhstan". The Moscow Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  27. "Passenger plane crashes in Kazakhstan, emergencies ministry says". https://www.theguardian.com/world/2024/dec/25/kazakhstan-plane-crash-aktau-azerbaijan-airlines-baku-grozny-fog-chechnya. 
  28. "Passenger Jet Crashes in Kazakhstan With 67 Onboard". https://www.nytimes.com/2024/12/25/world/europe/kazakhstan-plane-crash.html. 
  29. "Survivors of the Aktau plane crash were sitting in the tail section of the plane". Interfax. பார்க்கப்பட்ட நாள் 25 December 2024.
  30. "На самолете Azerbaijan Airlines заметили дыры, похожие на следы от стрельбы". news.ru. பார்க்கப்பட்ட நாள் 25 December 2024.
  31. Popov, Roman (25 December 2024). "Самолет Баку-Грозный сбили? Следы поражающих элементов обнаружили на фюзеляже". Arbat media. பார்க்கப்பட்ட நாள் 25 December 2024.
  32. "При крушении самолёта Azerbaijan Airlines в Казахстане погибли 38 человек" [38 killed in Azerbaijan Airlines plane crash in Kazakhstan]. gazeta.uz. 25 December 2024. பார்க்கப்பட்ட நாள் 25 December 2024.
  33. "Local state of emergency declared near AZAL plane crash site". https://en.inform.kz/news/local-state-of-emergency-declared-near-crash-of-azal-plane-crash-472a41/. 
  34. "Kazakh Emergency Ministry: Information exchange conducted with Azerbaijan and Russia on plane crash - VIDEO". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  35. "Aktau Residents Donate Blood After Baku-Grozny Flight Crash". https://astanatimes.com/2024/12/aktau-residents-donate-blood-after-baku-grozny-flight-crash/. 
  36. "Azerbaijani resident of Aktau: Nearly 300 people have gathered to participate in blood donation campaign". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  37. "Baku-Grozny Flight Crash Near Aktau Leaves 29 Hospitalized". https://astanatimes.com/2024/12/baku-grozny-flight-crash-near-aktau-leaves-29-hospitalized/. 
  38. "Russia's Emergency Ministry aircraft to transport Russian citizens injured in the crash to Moscow". Apa.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  39. "Russia's Consulate General in Uralsk establishes task force on plane crash in Aktau". Report.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  40. "Diplomatic mission: Representatives of Azerbaijan's Consulate General in Aktau are at plane crash site". Report.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
  41. "Azerbaijan sends special medical staff, equipment to Aktau following plane crash". news.az (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.