அசாமின் சுற்றுலா மையங்கள்

அசாம் இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இது செந்நிற ஆறுகளையும், நீல நிற மலைகளையும் கொண்டது. இங்கு, காசிரங்கா தேசியப் பூங்கா, மானசு தேசியப் பூங்கா, கரம்பாணி வனவிலங்கு சரணாலயம், காமாக்யா கோவில், போபிதோரா காட்டுயிர்ப் பகுதி, நாமெரி தேசியப் பூங்கா மற்றும் திப்ரு-ஷேய்க்ஹோவா தேசியப்பூங்கா ஆகியவை முக்கியமான சுற்றுலாத்தலங்கள் ஆகும். மேலும், இந்தியாவில் மிக அடத்தியான காடுகள் அசாமில் உள்ளன.

காசிரங்கா தேசியப்பூங்காவின் காண்டாமிருகம்
யானை சவாரி , காசிரங்கா தேசியப்பூங்கா

முக்கிய சுற்றுலா இடங்கள்[1] தொகு

  • பிரம்மபுத்திரா ஆறு - இந்திய நதிகளில் ஆண் பெயரைக் கொண்ட ஆறு இதுவே ஆகும்.
  • கவுகாத்தி - இது, அசாமின் தலைநகர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரிய நகரம் ஆகும். இது முழு பிராந்தியத்திற்கும் முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது. கவுகாத்தியின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக காமாக்யா கோயில், பிரம்மபுத்திரா நதியில் உள்ள ரிவர் க்ரூஸ், சங்கர்தேவ் கலாக்ஷேத்ரா, உமானந்தா கோயில், அஸ்ஸாம் மாநில உயிரியல் பூங்கா, ஷில்பகிராம் போன்றவை உள்ளன. மேலும், சந்துபி ஏரி,சோனாபூர், மதன் காம்தேவ், சந்திராபூர் மற்றும் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் ஆகியவை நகரத்திற்கு வெளியே உள்ள மற்ற பிரபலமான இடங்கள் ஆகும். மதன் காம்தேவ் செல்லும் போது, சுற்றுலாப் பயணிகள் தேதுவார் கிராமத்தில் அமைந்துள்ள பழங்கால கோவிலான கோபேஸ்வர் கோயிலுக்கும் வருகை தருகின்றனர்.
  • மாஜூலி - இது பிரம்மபுத்திரா ஆற்றின் அருகில் அமைந்த நன்நீர்த் தீவு என்று அழைக்கப்படுகிறது.[2] மஜூலி அதன் வைஷ்ணவ சத்திரங்களான கமலாபரி சத்ரா, டகின்பட் சத்ரா, கரமுர்ஹ் சத்ரா, அவுனியாட்டி சத்ரா, பெங்கேனாட்டி சத்ரா மற்றும் சமகுரி சத்ரா போன்றவற்றிற்கு பெயர் பெற்றது.
  • காசிரங்கா தேசியப் பூங்கா
  • ஜேடிங்கா - பறவைகள் சரணாலயம்.
  • சோனிட்பூர் - தேசியப் பூங்காங்கள் நிறைந்த பகுதி.
  • ஜோர்ஹாட் - நகரம்.
  • சிவசாகர் - தேயிலைத் தோட்டங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளன.
  • ஹஜோ - புனிதத்தலம்
  • ஹாப்லாங் - மலைவாழிடம்
  • டின்சுகியா - அசாமிம் இரண்டாவது பெரிய நகரம்
  • திப்ருகார் - தேயிலை நகரம் என அழைக்கப்படுகிறது.

புகைப்படங்கள் தொகு

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

அசாம் சுற்றுலா இணையதளம் அசாம் சுற்றுலா தளம்