அசாம் மாநிலப் பண்

அசாம் மாநிலப் பண் (அசாம் மாநிலத்தின் கீதம்) ஓ மோர் ஆபோனார் தேஸ் என்பதாகும். இது லட்சுமிநாத் பெசுபராவ் என்பவரால் இயற்றப்பட்டது. அசாமிய மொழியில் எழுதப்பட்ட இப்பாடல், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பேசப்படும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1][2][3]

பாடல் வரிகள் தொகு

அசாமியப் பாடல்
(தமிழ் எழுத்துகளில்)
பாடலின் பொருள்
ஓ’ மோர் ஆபோனார் தேஸ்
ஓ’ மோர் சிகுணீ தேஸ்
ஏனேகன் ஸுவலா, ஏனேகன் ஸுபலா
ஏனேகன் மர்மர் தேஸ்
ஓ’ மோர் ஸுரீஃயா மாத
அஸமர் ஸுவதி மாத
ப்ருதிவீர க(அ)தோ பிசாரி ஜனமடோ
நோபோவா கரிலேஓ பாத
ஓ’ மோர் ஓபஜா டாயி
ஓ’ மோர் அஸமீ ஆயி
சாயி லஓம் ஏபார முகனி தோமார
ஹேம்பாஹ மோர் பலோவா நாயி
ஓ, என் பிரியமான தாய்மண்ணே
ஓ, என் வசீகரமான தாய்மண்ணே
இனிமையுடைய, வளம் நிரம்பிய
நெருக்கமும், விருப்பமும் கொண்டுள்ள என் தாய்மண்ணே
ஓ, என் இனிய குரலே
அசாமின் மெல்லிசைக் குரல்
உலகெங்கிலும் தேடினாலும் கிடைக்காது
வாழ்வில் தேடினாலும் கிடைக்காது
ஓ, என் பிறப்பிடமே
ஓ, என் அசாம் தாயே!
எனக்கு இடம் கொடு, உன் முகத்தைப் பார்
என் மனம் இன்னும் நிறையவில்லை

மேற்கோள்கள் தொகு

  1. Encyclopedia of Indian Literature Volume 1, 1989, pp. 416-418.
  2. "SoundCloud - Hear the world's sounds".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "O Mor Apunar Desh". Indian Review. Archived from the original on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_மாநிலப்_பண்&oldid=3752042" இலிருந்து மீள்விக்கப்பட்டது