அசிட்டால்டிகைடு அமோனியா முப்படி
அசிட்டால்டிகைடு அமோனியா முப்படி (Acetaldehyde ammonia trimer) என்பது (CH3CHNH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். அசிட்டால்டிகைடு அமோனியா டிரைமர் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். தூய்மையான சேர்மம் நிறமற்று இருக்கும். இச்சேர்மத்தின் மாதிரிகள் ஆக்சிசனேற்றத்தால் தரங்குறைந்து இலேசான மஞ்சள் நிறம் அல்லது வெளிறிய பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. நீருறிஞ்சியாக இருப்பதால் முந்நீரேற்று வடிவில் கிடைக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Hexahydro-2,4,6-trimethyl-1,3,5-triazine
| |
வேறு பெயர்கள்
அசிட்டால்டிகைடு அமோனியா முப்படி
| |
இனங்காட்டிகள் | |
58052-80-5 | |
ChemSpider | 62692 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C6H15N3 | |
வாய்ப்பாட்டு எடை | 129.21 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
உருகுநிலை | 95 முதல் 97 °C (203 முதல் 207 °F; 368 முதல் 370 K) |
கரைதிறன் | முனைவு கரிமக் கரைப்பான்கள் |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | 26 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசிட்டால்டிகைடு அமோனியா முப்படி ஒரு முப்படியின வேதிச்சேர்மம் என்பதை இப்பெயர் வெளிப்படுத்தும் பகுதிப்பொருட்களின் மூலம் அறிய முடிகிறது. அசிட்டால்டிகைடும் அமோனியாவும் சேர்ந்து வினைபுரிந்து இச்சேர்மம் உருவாகிறது.
- 3 CH3CHO + 3 NH3 → (CH3CHNH)3 + 3 H2O
மூன்று மெத்தில் தொகுதிகளும் அமைப்பின் மையத்தில் பிணைக்கப்பட்டு சேர்மம் C3v இடக்குழு சீரொழுங்கில் காணப்படுவதாக அணுக்கரு காந்த ஒத்தத்திர்வு நிறமாலையியல் ஆய்வு தெரிவிக்கிறது[1] .
அசிட்டால்டிகைடு அமோனியா முப்படி என்ற இச்சேர்மம் அறுமெத்திலின்டெட்ராமீன் சேர்மத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அறுமெத்திலின்டெட்ராமீன் அமோனியா மற்றும் பார்மால்டிகைடின் ஒடுக்கவினையால் உருவாகும் ஒடுக்க விளைபொருளாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nielsen, A. T.; Atkins, R. L.; Moore, D. W.; Scott, R.; Mallory, D.; LaBerge, J. M. (1973). "Structure and Chemistry of the Aldehyde Ammonias. 1-Amino-1-alkanols, 2,4,6-Trialkyl-1,3,5-hexahydrotriazines, and N,N-Dialkylidene-1,1-Diaminoalkanes". Journal of Organic Chemistry 38 (19): 3288–3295. doi:10.1021/jo00959a010.