அசிட்டோலாக்டிக்கு அமிலம்
அசிட்டோலாக்டிக்கு அமிலம் (Acetolactic acid) என்பது C5H8O4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். α-அசிட்டோலாக்டிக்கு அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பக்கச்சங்கிலி அமினோ அமிலங்களான வாலைன் மற்றும் இலியூசின் அமிலங்களை உயிரித்தொகுப்பு முறையில் தயாரிக்க ஒரு முன்னோடி சேர்மமாக α-அசிட்டோலாக்டிக்கு அமிலம் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(2S)-2-ஐதராக்சி-2-மெத்தில்-3-ஆக்சோபியூட்டனாயிக்கு அமிலம் | |
இனங்காட்டிகள் | |
71698-08-3 | |
ChEBI | CHEBI:18409 |
ChemSpider | 389710 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 440878 |
| |
UNII | RTS9ADR29A |
பண்புகள் | |
C5H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 132.12 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுα-அசிட்டோலாக்டிக்கு அமிலம் பைருவிக் அமிலத்தின் இரண்டு மூலக்கூறுகளிலிருந்து அசிட்டோலாக்டேட்டு சிந்தேசு நொதியின் மூலம் தயாரிக்கப்படுகிறது.
வினை
தொகுα-அசிட்டோலாக்டிக்கு அமிலம் α-அசிட்டோலாக்டிக்கு டிகார்பாக்சிலேசு நொதியினால் கார்பாக்சில் நீக்கம் செய்யப்பட்டு அசிட்டோயின் என்ற வாசனை திரவ உட்கூறு உருவாகிறது. α-அசிட்டோலாக்டேட்டு என்ற பெயர் α-அசிட்டோலாக்டிக்கு அமிலத்தின் அயனி (இணைப்பு காரம்), உப்புகள் மற்றும் எசுத்தர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wood, B. J. B.; Holzapfel, W. H. (1995). "Carbohydrate Metabolism". The Lactic Acid Bacteria: The genera of lactic acid bacteria. Vol. 2. Springer. pp. 185–186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0215-5.
- ↑ Marth, E. H.; Steele, J. L. (2001). "Genetics of Lactic acid bacteria". Applied dairy microbiology. Vol. 110 of Food science and technology. A series of monographs. CRC Press. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-0536-7.