அசிநாப்தோகுயினோன்
வேதிச் சேர்மம்
அசிநாப்தோகுயினோன் (Acenaphthoquinone) என்பது C12H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பனான அசிநாப்தீனின் குயினோன் வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. அசிநாப்தோகுயினோன் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. தண்ணீரில் இது கரையாது. சில வேளாண் வேதிப்பொருள்களையும் சில சாயங்களையும் தயாரிப்பதற்கான முன்னோடி சேர்மமாக அசிநாப்தோகுயினோன் பயன்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசிநாப்தைலீன்-1,2-டையோன் | |
வேறு பெயர்கள்
அசிநாப்தோகுயினோன் (ஏற்றுக்கொள்ளப்படவில்லை)[1])
அசிநாப்தீன்குயினோன் 1,2-அசிநாப்தீன்குயினோன் அசிநாப்தீன் டையோன் 1,2-அசிநாப்தைலீன் டையோன் அசிநாப்தீன்-1,2-டையோன் 1,2-இருகீட்டோ அசிநாப்தீன் | |
இனங்காட்டிகள் | |
82-86-0 | |
3DMet | B00505 |
ChEBI | CHEBI:15342 |
ChEMBL | ChEMBL395653 |
ChemSpider | 6468 |
EC number | 201-441-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02807 |
பப்கெம் | 6724 |
| |
UNII | 3950D6UEIQ |
பண்புகள் | |
C12H6O2 | |
வாய்ப்பாட்டு எடை | 182.18 g·mol−1 |
தோற்றம் | ஊதா-மஞ்சள் படிகங்கள் முதல் பழுப்பு தூள் வரை |
உருகுநிலை | 257 முதல் 261 °C (495 முதல் 502 °F; 530 முதல் 534 K) |
கரையாது (90.1 மி.கி/லி) | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபொட்டாசியம் இருகுரோமேட்டுடன் அசிநாப்தீனைச் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தினால் ஆய்வகத்தில் அசிநாப்தோகுயினோனை தயாரிக்கலாம்.[3] வணிக ரீதியான தயாரிப்பில் பெராக்சைடு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. அதிகப்படியான ஆக்சிசனேற்றம் நாப்தலீன் இருகார்பாக்சிலிக் நீரிலியை அளிக்கிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 724. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 Griesbaum, Karl; Behr, Arno; Biedenkapp, Dieter; Voges, Heinz-Werner; Garbe, Dorothea; Paetz, Christian; Collin, Gerd; Mayer, Dieter; Höke (2005), "Hydrocarbons", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a13_227
- ↑ Allen, C. F. H.; VanAllan, J. A. (1944). "Acenaphthenequinone". Org. Synth. 24: 1. doi:10.15227/orgsyn.024.0001.