அசுகரோன் அன்னாசி

அசுகரோன் அன்னாசிப்பழங்கள் (Azucarron pineapple) ஒண்டுராசு, மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் பிற பகுதிகளில் விளையும் மிகவும் இனிமையான அன்னாசிப்பழ வகை பழமாகும். இவை வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. இப்பழங்கள் கூம்பு வடிவத்தில் காணப்படும். அசுகரோன் என்றும் சுருக்கமாக இவை அழைக்கப்படுகின்றன.

விளக்கம்

தொகு

இந்தவகை அன்னாசி பொதுவாக 800 முதல் 1,400 கிராம் வரை எடையுடையதாக இருக்கும். பழக்கூழ் நிறம் அடர் மஞ்சள் நிறமாக, நீர் நிறைந்து காணப்படும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2009-06-12. பார்க்கப்பட்ட நாள் 2008-08-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Pineapples varieties in South America
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுகரோன்_அன்னாசி&oldid=3870518" இலிருந்து மீள்விக்கப்பட்டது