அசுட்டட்டைன் ஓரயோடைடு

அசுட்டட்டைன் ஓரயோடைடு (Astatine monoiodide, அசுட்டட்டைன் மோனோவயோடைடு) என்பது AtI என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட உப்பீனிகளிடைச் சேர்மமாகும். அறியப்பட்ட உப்பீனிகளிடைச் சேர்மங்களில் மிகவும் கனமானது அசுட்டட்டைன் ஓரயோடைடு ஆகும். ஆனால் விதிவிலக்காக இதைவிடக் கனமானதாகக் கருதப்படும் IBr5 என்ற வாய்பாடு கொண்ட அயோடின் பெண்டாபுரோமைடு சேர்மத்தின் இருப்பு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 213 பாகை செல்சியசு வெப்பநிலையில் அசுட்டட்டைன் ஓரயோடைடு கொதிக்கும்.[1]

அசுட்டட்டைன் ஓரயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசுட்டட்டைன் ஓரயோடைடு
வேறு பெயர்கள்
அசுட்டட்டைன் அயோடைடு
இனங்காட்டிகள்
ChemSpider 34496389
InChI
  • InChI=1S/AtH2.HI/h1H2;1H/q+1;/p-1
    Key: TWAXUBWUPRBIEH-UHFFFAOYSA-M
  • InChI=1/AtH2.HI/h1H2;1H/q+1;/p-1
    Key: TWAXUBWUPRBIEH-REWHXWOFAE
யேமல் -3D படிமங்கள் Image
  • [I-].[AtH2+]
பண்புகள்
AtI
வாய்ப்பாட்டு எடை 336.904 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அசுட்டட்டைன் புரோமைடு
அசுட்டட்டைன் ஓற்றைகுளோரைடு
interhalogen compounds
தொடர்புடையவை
அயோடின் ஒற்றை குளோரைடு
அயோடின் ஒற்றைபுளோரைடு
புரோமின் ஒற்றை குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

அசுட்டட்டைன் மற்றும் அயோடின் தனிமங்கள் 1:1 என்ற மோலார் விகிதத்தில் நேரடியாக வினைபுரிந்து அசுட்டட்டைன் ஓரயோடைடு உண்டாகிறது[2].

2 At + I2 → 2 AtI

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  • Zuckerman, J J; Hagen, A P (1989). Inorganic Reactions and Methods, the Formation of Bonds to Halogens. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-18656-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுட்டட்டைன்_ஓரயோடைடு&oldid=4174121" இலிருந்து மீள்விக்கப்பட்டது