அசுதினாபுரம்
அசுதினாபுரம் (Hastinapuram) இந்தியாவில் ஐதராபாத்தின் அருகில் உள்ள நகரமாகும்.[1] இது நாகார்ஜுன சாகர் நெடுஞ்சாலையை நோக்கி அமைந்துள்ளது. இதன் அண்டை பகுதிகள் பி. என். ரெட்டி நகர், வனசுதலி புரம் மற்றும் எல். பி. நகர் . மேலும் அரசு ஊழியர் குடியிருப்பு, கிறித்துவ குடியிருப்பு இப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி கிழக்கு அசுதினாபுரம், மேற்கு அசுதினாபுரம், தெற்கு அசுதினாபுரம் மற்றும் மத்திய அசுதினாபுரம் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் உள்ள மெற்றோ நிலையம் எல். பி. நகர் ஆகும். ராமோஜி திரைப்பட நகரம் மற்றும் மவுண்ட் ஓபரா போன்ற சுற்றுலாத் தலங்கள் 10-15 கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ளன. இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் 25 கி.மி. தூரத்தில் உள்ளது.
அசுதினாபுரம் | |
---|---|
அருகிலுள்ள நகரங்கள் | |
நாடு | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | தெலங்காணா |
மாவட்டம் | ரங்காரெட்டி |
நகரம் | ஐதராபாத்து |
மொழி | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS |