அசுபர் உசைன்
அசுபர் உசேன் ( Azfar Hussain வங்காள மொழி: আজফার হোসেন ) ஒரு பங்களாதேஷ் கோட்பாட்டாளர், விமர்சகர், கல்வியாளர், இருமொழி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பொது அறிவுஜீவி ஆவார்.[1][2] இவர் ப்ரூக்ஸ் கல்லூரியில் உள்ள உள்கலாச்சார கல்வி பிரிவில் இணை பேராசிரியராக உள்ளார்.மிச்சிகனில் உள்ள கிராண்ட் பள்ளத்தாக்கு மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். மேலும் உயர் கல்விக்கான உலகளாவிய மையத்தின் துணைத் தலைவராகவும் மற்றும் ஆங்கிலம், உலக இலக்கியம், மற்றும் இடைநிலை ஆய்வுகள் போன்ற பிரிவுகளிலுக்கு கவுரப் பேராசிரியராகவும் இருக்கிறார். வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், பவுலிங் கிரீன் மாநில பல்கலைக்கழகம் மற்றும் ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், உலக இலக்கியம், இன ஆய்வுகள் மற்றும் கலாச்சார ஆய்வுகள் பிரிவுகளை மாணவர்களுக்கு கற்பித்தார். பங்களாதேஷில், ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகம் மற்றும் நார்த் சவுத் பல்கலைக்கழகத்திலும் ஆங்கிலம் கற்பித்தார்.[3] லிபரல் ஆர்ட்ஸ் பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்-இன்-ரெசிடென்ஸ் மற்றும் கோடைகால சிறப்புப் பேராசிரியராக ஆங்கிலம் மற்றும் மனிதநேய பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் ரைசோம்ஸ்: கல்ச்சுரல் ஸ்டடீச் இன் எமெர்ஜிங் நாவ்லேட்சில் ஆலோசனைப் பதிப்பாசிரியராக உள்ளார்.[4] பெங்காலி பத்திரிகைகள் நதுன் திகன்தா மற்றும் சர்பஜன்கோதா ஆகிய ஆசிரியர் குழுக்களில் இவர் உறுப்பினராக உள்ளார்.
உசைன்-ஆங்கிலம் மற்றும் பெங்காலி இரண்டிலும்-மேற்கத்திய-மொழிகளில் அல்லாத நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மேலும் நூற்றுக்கணக்கான கல்வி சார்ந்த பிரபலமான மற்றும் ஆக்கபூர்வமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் கவிதை உட்பட பலதரப்பட்ட தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.[1] கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் கதைகள் மற்றும் ஸ்டீபன் மல்லர்மே,[5] விசென்ட் அலிக்சாண்ட்ரே,[6] மற்றும் ரோக் டால்டன் ஆகியோரின் கவிதைகளை இவர் வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். கபீரின் பாடல்களையும் [7] பைஸ் அஹ்மத் ஃபைஸின் கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.[8]
உசைன் சர்வதேச அளவில் அறியப்பட்ட பொதுப் பேச்சாளர் ஆவார். மேலும் இவர் பங்களாதேஷ் சமூகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் தொடர்பான ஊடக நேர்காணல்களின் அடிக்கடி கலந்து கொண்டு வருகிறார்.[9][10][11][12][13][14]
கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை
தொகுஅசுபர் உசேன் டாக்கா பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தினையும் (ஹானர்ஸ்) மற்றும் முதுகலைப் பட்டத்தினையும் ஆங்கிலப் பிரிவில் பெற்றார். இவர் ஃபுல்பிரைட் பெல்லோஷிப்பின் கீழ் ஆங்கிலத்தில் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தினைப் பெற்றார். வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியிலிருந்து ஆங்கிலம் மற்றும் உலக இலக்கியத்தில் முனைவர் பட்டத்தினையும் பெற்றார்.[15] 2004 ஆம் ஆண்டில் வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் ஆங்கிலத் துறையில் போஸ்ட்டாக்டோரல் பிளாக்பர்ன் ஃபெலோவாகவும் பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து பங்களாதேஷில் தங்கியிருந்த காலத்தில் உசைன் பங்களாதேஷின் செயல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். உயர் கல்விக்கான உலகளாவிய மையத்தின் துணைத் தலைவராகவும் மற்றும் ஆங்கிலம், உலக இலக்கியம், மற்றும் இடைநிலை ஆய்வுகள் போன்ற பிரிவுகளிலுக்கு கவுரப் பேராசிரியராகவும் இருக்கிறார். வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், பவுலிங் கிரீன் மாநில பல்கலைக்கழகம் மற்றும் ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், உலக இலக்கியம், இன ஆய்வுகள் மற்றும் கலாச்சார ஆய்வுகள் பிரிவுகளை மாணவர்களுக்கு கற்பித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅசுபர் உசேன் தனது வாழ்வின் பெரும்பான்மையான காலங்களை வங்காளதேசம் மற்றும் அமெரிக்காவிலும் கழித்து வருகிறார். இவர் தற்போது மிச்சிகனில் உள்ள அலெண்டேலில் வசித்து வருகிறார். இவருக்கு 2002 ல் திருமணம் நடந்தது. சல்மா உசேன் என்ற மகள் உள்ளார்.[16]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Azfar Hussain". The Global Center for Advanced Studies. The Global Center for Advanced Studies. Archived from the original on 2 April 2016. பார்க்கப்பட்ட நாள் 8 June 2016.
- ↑ ড. আজফার হোসেন | সকালের বাংলাদেশের আলাপচারিতায় | Jamuna TV (in Bengali), பார்க்கப்பட்ட நாள் 2019-10-08
{{citation}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ "Alternative education for transforming the world". Dhaka tribune. Dhaka Tribune. 2 April 2016. Archived from the original on 14 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "About Rhizomes". பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
- ↑ "স্তেফান মালার্মের দুইটি গদ্যকবিতা". সাহিত্য ক্যাফে (in Bengali). 13 June 2013. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
- ↑ Hussain, Azfar (9 July 2013). "বিসেন্তে আলেকজান্দ্রের দশটি কবিতা". bdnews24.com. bdnews24.com. Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kabir (d. 1575?): Selected Poems". public.wsu.edu (in English). Washington State University. Archived from the original on 26 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Faiz Ahmad Faiz (1914-1984): Selected Poems". public.wsu.edu. Washington State University. Archived from the original on 26 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mercier, Laurie. "Interview with Azfar Hussain: Micronarratives Against Domination". kboo.fm. KBOO. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
- ↑ "দেরিদা নিজেকে ম্যাটেরিয়েলিস্ট দাবি করেন কিন্তু তিনি ভূতুড়েপনায় আচ্ছন্ন : আজফার হোসেন". www.banglatribune.com (in Bengali). Bangla Tribune. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
- ↑ "সময় সংলাপ, ৯-০৬-২০১৬". Youtube. somoytv. 9 June 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
- ↑ "Television Interview on the Politics of Comparative Literature (in Bengali)".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "রঙ্গমাতন সোলায়মান মেলা ২০০৮-এর বৈঠক : মগজে উপনিবেশ ও এ সময়ের নাটক". பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
- ↑ "আজকের বাংলাদেশ". Independent Television. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
- ↑ "আজফার হোসেন". bdnews24.com. bdnews24.com. Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "বিষয় 'বুদ্ধিজীবী' আজফার হোসেনের সঙ্গে আলাপ". bdnews24. bdnews24. Archived from the original on 18 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)