அசுவமேத தேவி
இந்திய அரசியல்வாதி
அசுவமேத தேவி (Ashwamedh Devi)(பிறப்பு 18 செப்டம்பர் 1967) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் இந்திய மாநிலமான பீகார் மாநிலத்தில் உள்ள உஜியார்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
அசுவமேத தேவி | |
---|---|
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | உஜ்ஜயப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 செப்டம்பர் 1967 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | பிரதீப் மகாதோ |
வாழிடம்(s) | மெய்யரி, சமஸ்திபூர் (பீகார்) |
தொழில் | விவசாயம், அரசியல்வாதி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅசுவமேத தேவி செப்டம்பர் 18, 1967 அன்று சமஸ்திபூர் (பீகார்) மாவட்டத்தில் உள்ள மேயாரியில் பிறந்தார். இவர் 7 மே 1979-ல் பிரதீப் மகாதேவை மணந்தார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.[2]
கல்வி
தொகுஅசுவமேத தேவி பல்கலை நுழைவு தகுதித் தேர்வினை முடித்துள்ளார்.[2]
தொழில்
தொகுஅசுவமேத தேவி 2000ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பதவியில் அசுவமேத தேவி 2009வரை உறுப்பினராக இருந்தார். 2009ஆம் ஆண்டில், இவர் 15வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "EX-MP Track - Lok Sabha". PRS. Archived from the original on 21 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "Biographical Sketch Member of Parliament 15th Lok Sabha". Archived from the original on 25 February 2014. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.