அசேல குணரத்ன

இலங்கை துடுப்பாட்டக்காரர்

தவுந்தீகீதர அசேல சம்பத் குணரத்ன, பொதுவாக அசேல குணரத்ன (Downdegedara Asela Sampath Gunaratne, commonly known as Asela Gunaratne பிறப்பு: சனவரி 8, 1986) என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வு துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ,பன்னாட்டு 20 20 ஆகிய போட்டிகளுக்காக விளையாடி வருகிறார். வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர் அவ்வப்போது மித வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். தற்போது வாரண்ட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.[1][2] அவர் கண்டி ஸ்ரீ ராகுலா கல்லூரியின் கடந்த கால மாணவர்.[3] நவம்பர் 2017 இல், இலங்கை கிரிக்கெட்டின் ஆண்டு விருது வழங்கும் விழாவில் நான்கு விருதுகளை வென்றார், இதில் சிறந்த சகலத் துறையருக்கான இரண்டு விருதுகள் அடங்கும்.[4]

உள்ளூர் போட்டிகள் மற்றும் 20 20தொகு

பிப்ரவரி 2017 இல், மும்பை இந்தியன்ஸ் அணி 2017 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு 30 லட்சத்திற்கு இவரை ஒப்பந்தத்தில் எடுத்தது[5]

மார்ச் 2018 இல், அவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாண போட்டித் தொடரில் இவர் கண்டியின் அணியில் இடம் பெற்றார் . அடுத்த மாதம், 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கண்டியின் அணியிலும் அவர் இடம் பெற்றார் .

ஆகஸ்ட் 2018 இல், நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட இருபது-20 லீக்கில் இவர் காலி துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார். 2018 19 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச பிரீமியர் லீக் துடுப்பாட்ட தொடரில் இவர் காமிலா விக்டோரியன் அணி சார்பாக விளையாடத் தேர்வானார். 2019 ஆம் ஆண்டில் இவர் சூப்பர் ஃபோர் மாகாண துடுப்பாட்ட தொடரில் தொடரில் மீண்டும் கண்டி அணியில் இடம் பெற்றார்.[6]

சர்வதேச வாழ்க்கைதொகு

பிப்ரவரி 2016 இல் இலங்கை துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. பிப்ரவரி 20, 2011 இல் இந்திய துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது-20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் நான்கு ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி 9 இலக்குகளில் வெற்றி பெற்றது.[7]

29 அக்டோபர் 2016 அன்று சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[8] இந்தத் தொடரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் 50 ஓட்டங்களை பதிவு செய்தார். இரண்டாவது போட்டியில் தனது முதல் 100 ஓட்டங்களைை பதிவு செய்தார்.

இலங்கை துடுப்பாட்ட அணி,ஜிம்பாப்வே துடுப்பாட்ட அணி, மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட அணி, ஆகிய மூன்று அணிகள் கலந்துகொண்ட முத்தரப்பு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தொடரில் இவர் இலங்கை சார்பாக விளையாடினார். .[9] ஜிம்பாப்வேக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் 3 இலக்குகளை வீழ்த்தினார்.[10]

மே 2018 இல், 2018–19 பருவத்தில் முன்னதாக இலங்கை துடுப்பாட்ட வாரியத்தால் தேசிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட 33 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருந்தார்.[11][12] டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைத் தொடரில் இவர் இலங்கை அணியில் இடம் பெற்றார்.[13]

தென்னாப்பிரிக்கா 2017தொகு

குணரத்ன தனது முதல் ஒருநாள் நூறு ஓட்டச்ங்களை 11 பிப்ரவரி 2017 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சுரியனில் நடைபெற்ற போட்டியின் போது எடுத்தார்.[14] இருப்பினும், அந்தப் போட்டியில் இலங்கை 88 ஓட்டங்களில் தோல்வியடைந்தது.[15]

குறிப்புகள்தொகு

 1. "Army Cricketers Selected for T-20 Tour in India". மூல முகவரியிலிருந்து 11 September 2016 அன்று பரணிடப்பட்டது.
 2. "Army Promotions For Seekkuge Prasanna and Asela Gunaratne".
 3. "Coach Kuruppu lauds 'reluctant' schoolboy cricketer Gunaratne's growth".
 4. "Gunaratne wins big at SLC's annual awards".
 5. "List of players sold and unsold at IPL auction 2017".
 6. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament".
 7. "Sri Lanka tour of India and Bangladesh, 3rd T20I: India v Sri Lanka at Visakhapatnam, Feb 14, 2016".
 8. "Sri Lanka tour of Zimbabwe, 1st Test: Zimbabwe v Sri Lanka at Harare, Oct 29 – Nov 2, 2016".
 9. "Tharanga named SL captain for tri-series". ESPNcricinfo (ESPN Sports Media). 5 November 2016. http://www.espncricinfo.com/zimbabwe-v-sri-lanka-2016-17/content/story/1064908.html. பார்த்த நாள்: 5 November 2016. 
 10. "Zimbabwe Tri-Nation Series, 1st Match: Zimbabwe v Sri Lanka at Harare, Nov 14, 2016". ESPNcricinfo (ESPN Sports Media). 14 November 2016. http://www.espncricinfo.com/ci/engine/match/1059710.html. பார்த்த நாள்: 14 November 2016. 
 11. "Sri Lanka assign 33 national contracts with pay hike".
 12. "Sri Lankan players to receive pay hike".
 13. "Sri Lanka Squad for the ACC Emerging Teams Cup 2018". மூல முகவரியிலிருந்து 3 December 2018 அன்று பரணிடப்பட்டது.
 14. "11 consecutive wins & Most 350-plus totals in ODIs". ESPNcricinfo (ESPN Sports Media). 10 February 2017. http://www.espncricinfo.com/south-africa-v-sri-lanka-2016-17/content/story/1081885.html. பார்த்த நாள்: 10 February 2017. 
 15. "Amla, de Kock tons lead SA to 5–0 and No. 1". ESPNcricinfo (ESPN Sports Media). 10 February 2017. http://www.espncricinfo.com/south-africa-v-sri-lanka-2016-17/content/story/1081840.html. பார்த்த நாள்: 10 February 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசேல_குணரத்ன&oldid=2867802" இருந்து மீள்விக்கப்பட்டது