அசைல் சயனைடு
அசைல் சயனைடு (Acyl cyanide) என்பது R−C(O)CN என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாடும் R−C(=O)−C≡N என்ற கட்டமைப்பு வாய்ப்பாடும் கொண்ட கரிம வேதியியல் வேதி வினைக்குழுவாகும். அசைல் குழுவுடன் (R−C=O) ஒரு சயனைடு குழு (−C≡N) சேர்ந்து அசைல் சயனைடு உருவாகிறது. அசிட்டைல் சயனைடு, பார்மைல் சயனைடு, மற்றும் ஆக்சாலைல் இருசயனைடு என்பவை அசைல் சயனைடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். கரிமத் தொகுப்பு வினைகளில் இவை வினையாக்கிகளாகப் பயன்படுகின்றன.[1][2]
தயாரிப்பு
தொகுபாரம்பரியமாக சோடியம் சயனைடுடன் அசைல் குளோரைடு உப்பைச் சேர்த்து இரட்டைச் சிதைவு வினைக்கு உட்படுத்தினால் அசைல் சயனைடு உருவாகிறது:
மாறாக அசைல் ஆல்டாக்சிமை நீர்நீக்க வினைக்கு உட்படுத்தியும் அசைல் சயனைடை தயாரிக்கலாம்:
கீட்டீன்களை ஐதரோசயனேற்றம் செய்தும் அசைல் சயனைடை தயாரிக்க முடியும்:
வினைகள்
தொகுஅசைல் சயனைடுகள் இலேசான அசைலேற்ற முகவர்களாகும்.[2] நீரிய காரத்துடன் வினையில் ஈடுபட்டால் அசைல் சயனைடுகள் சயனைடு மற்றும் கார்பாக்சிலேட்டாக உடைகின்றன[3]
அசைடுகளுடன் அசைல் சயனைடுகள் வினைபுரிந்து அசைல் டெட்ரசோல் உருவாகிறது. இவ்வினை கிளிக்கு வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Liu, Bing; Wang, Yong; Chen, Ying; Wu, Qian; Zhao, Jing; Sun, Jianwei (2018). "Stereoselective Synthesis of Fully-Substituted Acrylonitriles via Formal Acylcyanation of Electron-Rich Alkynes". Organic Letters 20 (12): 3465–3468. doi:10.1021/acs.orglett.8b01180. பப்மெட்:29873500.
- ↑ 2.0 2.1 Morris, Joel (2001). "Acetyl Cyanide". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.ra026. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.
- ↑ Hünig, Siegfried; Schaller, Rainer (1982). "The Chemistry of Acyl Cyanides". Angewandte Chemie International Edition in English 21: 36–49. doi:10.1002/anie.198200361.
- ↑ Demko, Zachary P.; Sharpless, K. Barry (2002). "A Click Chemistry Approach to Tetrazoles by Huisgen 1,3-Dipolar Cycloaddition: Synthesis of 5-Acyltetrazoles from Azides and Acyl Cyanides". Angewandte Chemie International Edition 41 (12): 2113–2116. doi:10.1002/1521-3773(20020617)41:12<2113::AID-ANIE2113>3.0.CO;2-Q. பப்மெட்:19746613.