அசோக் குமார் யாதவ்
அசோக் குமார் யாதவ் (Ashok Kumar Yadav)(பிறப்பு 21 ஜூன் 1970) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராவார்.
அசோக் குமார் யாதவ் | |
---|---|
இந்திய நாடாளுமன்றம், மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | உக்கும்தேவ் நாராயண் யாதவ் |
தொகுதி | மதுபனீ மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூன் 1970 பிஜுலி, தர்பங்கா மாவட்டம் பீகார் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சீதா தேவி |
பெற்றோர் | உக்கும்தேவ் நாராயண் யாதவ் |
மூலம்: [1] |
மக்களவை உறுப்பினராக
தொகுஅசோக் குமார் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பீகார், மதுபனீ மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 18ஆவது மக்களவை உறுப்பினராக அசோக் குமார் உள்ளார்.[2]
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஇவர் பிப்ரவரி 2005, அக்டோபர் 2005 மற்றும் மீண்டும் 2010இல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக கியோட்டியிலிருந்து (விதான் சபா தொகுதி) பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாஜக தலைவர் உக்கும்தேவ் நாராயண் யாதவின் மகனாவார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madhubani Election Results 2019: BJP's Ashok Kumar Yadav has won with a margin of 454940 votes". Times Now. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024 Parliamentary Constituency 6 - Madhubani (Bihar)". Election Commission of India. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 June 2024.
- ↑ "Wearing traditional Madhubani stole & cap, BJP MP Ashok Kumar Yadav attends first day of 17th Lok Sabha". DNA. 17 June 2019. பார்க்கப்பட்ட நாள் 10 August 2020.