உக்கும்தேவ் நாராயண் யாதவ்

இந்திய அரசியல்வாதி

உக்கும்தேவ் நாராயண் யாதவ் (Hukumdev Narayan Yadav) (பிறப்பு 17 நவம்பர் 1939) பீகாரைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தார். இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றவர். இவர் பீகார் மதுபனீ தொகுதியில் 1977, 1999, 2009 மற்றும் 2014ல் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் 1960களில் சோசலிசக் கட்சியுடனும், ஜனதா தளத்தின் பல்வேறு பொறுப்புகளிலும், 1980களில் அதன் பங்கேற்ற இவர், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2] யாதவ் நாடாளுமன்றத்தில் வீரமாகப் பேசும் உரைகளுக்குப் பெயர் பெற்றவர்.[3][4][5] ஆகத்து 2018ல், 2014-2017 காலத்திற்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதினைப் பெற்றார்.

உக்கும்தேவ் நாராயண் யாதவ்
Hukumdev Narayan Yadav
சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதுபெறும் யாதவ், 2018
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்கவை
முன்னையவர்சக்கீல் அகமது, இந்திய தேசிய காங்கிரசு
பின்னவர்அசோக் குமார் யாதவ்
தொகுதிமதுபனீ நாடாளுமன்ற தொகுதி
பதவியில்
1999–2004
பதவியில்
2009–2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 நவம்பர் 1939 (1939-11-17) (அகவை 84)
பிஜுலி, தர்பங்கா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுதேசு யாதவ்[1]
பிள்ளைகள்3 (அசோக் குமார் யாதவ்)
வாழிடம்(s)பிஜீலி, தர்பங்கா, புது தில்லி
முன்னாள் கல்லூரிசந்திரதாரி மிதிலா கல்லூரி
வேலைஅரசியல்வாதி, விவசாயி
விருதுகள்பத்ம பூசண்

கல்வி மற்றும் பின்னணி

தொகு

பட்டப்படிப்பினை முடித்த யாதவின் தொழில் விவசாயம் ஆகும். அரசியல் பிரமுகரான இவர் சமூக சேவகராக இந்திரநாத் ஜாவுடன் இணைந்து, மதுபனியில் சுறுசுறுப்பாகச் சேவையாற்றினார். இந்திரநாத் ஜாவின் மரணத்திற்குப் பிறகு, அனைத்துப் பொறுப்பையும் இவரே ஏற்றுக்கொண்டார்.[1]

வகித்தப் பணிகள்

தொகு
# முதல் வரை பதவி
01 1960 1968 கிராம பிரதான், பிஜீலீ ஊராட்சி (இரண்டு முறை)
02 1965 1967 தலைவர், பிரகாந் ஊராட்சி சமீதி,
03 1967 1967 பீகார் சட்டமன்ற உறுப்பினர்
04 1967 1967 உறுப்பினர், பொது கணக்கு குழு, விதி மற்றும் மணு குழு
05 1967 1967 தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம்
06 1969 1969 பீகார் சட்டமன்ற உறுப்பினர்
07 1969 1969 உறுப்பினர், பொது கணக்கு குழு, விதிகள், மணு குழு
08 1969 1969 தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம்
09 1972 1972 பீகார் சட்டமன்ற உறுப்பினர்
10 1972 1972 உறுப்பினர், பொது கணக்கு குழு, விதிகள், மணு குழு
11 1972 1972 தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம்
12 1971 1971 ஜில்லா பரிசத் தலைவர் (மாவட்ட குழு)
13 1972 1972 தலைவரி, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), தர்பாங்கா
14 1974 1977 பொதுச்செயலர், பாரதியா லோக்தள், பீகார்
15 1977 1979 6வது மக்களவை உறிப்பினர், மதுபனீ மக்களவைத் தொகுதி
16 1977 1979 பொதுச்செயளர், ஜனதா கட்சி, பீகார்
17 1977 1979 செயலர், நாடாளுமன்ற குழு, பீகார்
18 1980 1980 நாடாளுமன்ற மாநிலங்கவை உறுப்பினர்
19 1980 1986 தலைமை கொறடா, மாநிலங்கவை, லோக் தள்
20 1980 1986 குடியரசுத் தலைவர் தேர்தல் குழு, லோக் தள், மேலவை, பீகார்
21 1982 1984 துணைத் தலைவர், மாநிலங்கவை
22 1983 1983 தேசிய பொதுச் செயலாளர், ஜனதா கட்சி
23 1983 1984 உறுப்பினர், பட்டியல் இனத்தவர் குழு
24 1985 1986 உறுப்பினர், அலுவல் மொழிக் குழு
25 1985 1988 தலைவர், ஜனதா கட்சி, பீகார்
26 1989 - மீண்டும் 9வது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு (சீதாமஃ‌டீ மக்களவைத் தொகுதி)
27 1989 1990 உறுப்பினர், வணிக ஆலோசனைக் குழு
28 1990 1990 உறுப்பினர், பொதுத்து துறை நிர்வாகம், கலந்தாய்வு குழு, நிதி அமைச்சகம்
29 1990 1990 துணைத் தலைவர், ஜனதா தளம், மாநிலங்கவை
30 1990 1991 கைத்தறி மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறை கேபினட் அமைச்சர்
31 1999 - 13வது மக்களவைக்கு 3வது முறையாக மதுபனீயிலிருந்து தேர்வு
32 1999 2000 விவசாயத் துறை அமைச்சர்
33 2000 2000 சாலை போக்குவரத்து துறை அமைச்சர்
34 2000 2001 கப்பல் போக்குவரத்து அமைச்சர்
35 2001 - விவசாயத் துறை அமைச்சர்
36 2009 2014 15வது மக்களவைக்கு 4வது முறையாக மதுபனீயிலிருந்து தேர்வு
37 2009 2014 விவசாயக்குழு உறுப்பினர்
38 2009 2014 உறுப்பினர், அரசு உறுதிக்குழு
39 2009 2014 அலுவல் மொழிக்குழு உறுப்பினர்
40 2009 2014 நகர்புற மேம்பாட்டு குழு உறுப்பினர்
41 2014 2019 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர மகன் மதுபனீ தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மேலும் காண்க

தொகு
  • இந்தியாவின் 15 வது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Hukmdev Narayan Yadav". National Portal of India. Government of India. பார்க்கப்பட்ட நாள் 17 March 2017.
  2. "Majority of Muslims in India are descendants of Hindus: BJP MP Hukumdev Narayan Yadav".
  3. Mango News (29 April 2016). "Hukmdev Narayan Yadav Excellent Speech In Lok Sabha - Tears Into Congress - PM Modi - Mango News". YouTube. பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
  4. Bharatiya Janata Party (28 July 2016). "Shri Hukmdev Narayan Yadav's speech on discussion during price rise in the country, 28.07.2016". YouTube. பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
  5. Bharatiya Janata Party (18 March 2015). "Shri Hukmdev Narayan Yadav's speech in the discussion on The General Budget(2015-16): 16.03.2015". YouTube. பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.