அசோக் சோட்டலால் அகர்வால்

அசோக் சோட்டலால் அகர்வால் (Ashok Chhotelal Agarwal)(27 ஆகஸ்ட் 1937 - 23 பிப்ரவரி 2019) என்பவர் இந்திய நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.

கல்வி

தொகு

அகர்வால் 1937இல் பிறந்தார். இவர் பி.ஏ., எல்.எல். பி. தேர்ச்சி பெற்றார். சட்டப்படிப்பினை புனே ஐ. எல். எஸ். சட்டக் கல்லூரியில் 1960ல் முடித்தார்.[1] பின்னர் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியினைத் தொடங்கி பாம்பே உயர்நீதி மன்றத்தில் பயிற்சி பெற்றார்.[2]

நீதிபதி பணி

தொகு

அகர்வால் 1974-ல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கில் அரசாங்க உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1986ஆம் ஆண்டு நவம்பர் 21 நாளன்று, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக அகர்வால் நியமிக்கப்பட்டார். 1987 ஜூன் 12-ல் நிரந்தர நீதிபதியானார்.[3] பின்னர் அகர்வால், தலைமை நீதிபதியாக 1999 மே 24 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகத்து 26, 1999-ல் பணி ஓய்வு பெற்றார்.[4] ஓய்வுக்குப் பிறகு, அக்டோபர் 1999-ல் இவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், புது தில்லியின் தலைவரானார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Emmanuel, Meera. "Madras High Court mourns sudden demise of former Chief Justice AC Agarwal". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
  2. Court, India Supreme (2005). Judges of the Supreme Court and the High Courts as on ... (in ஆங்கிலம்). Ministry of Law, Justice and Company Affairs, Department of Justice, Government of India.
  3. High Court of Bombay, Hon'ble Former Justices. "MR. A.C. Agarwal". பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  4. "Madras High Court | Former Chief Justices". www.hcmadras.tn.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.