அசோப்ரோயிட்டு

போரேட்டு கனிமம்

அசோப்ரோயிட்டு (Azoproite) என்பது (Mg,Fe2+)2(Fe3+,Ti,Mg)(BO3)O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது ஓர் அரிய மாங்கனீசு-இரும்பு போரேட்டு கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. முதன் முதலில் உருசிய நாட்டின் பைக்கால் ஏரிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. பன்னாட்டு புவியியல் சங்கத்தால் 1969 ஆம் ஆண்டு நிதியுதவி செய்யப்பட்ட பூமியின் மேலோட்டு ஆழமான மண்டலங்களின் ஆய்வுக்கான சங்கத்தின் பெயரால் கனிமத்திற்கு அசோப்ரோயிட்டு எனப் பெயரிடப்பட்டது. அசோப்ரோ என்பது இச்சங்கத்திற்கான சுருக்கப்பெயராகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் அசோப்ரோயிட்டு கனிமத்தை Azo[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.[1]

அசோப்ரோயிட்டு
Azoproite
அரிய அசோப்ரோயிட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைபோரேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Mg,Fe2+
)
2
(Fe3+
,Ti,Mg)(BO
3
)O
2
இனங்காணல்
நிறம்கருப்பு
படிக அமைப்புநேர் சாய்சதுரம்
பிளப்புதனித்துவம்/சிறப்பு
(010) இல் சரிபிளவு, (001) இல் தெளிவற்ற பிளவு
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5.5
மிளிர்வுவிடாப்பிடியானது
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Azoproite பரணிடப்பட்டது 2016-12-01 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோப்ரோயிட்டு&oldid=4127782" இலிருந்து மீள்விக்கப்பட்டது