அசோவ் கடல்
அசோவ் கடல் (Sea of Azov)[3] கிரேக்கம்: Μαιῶτις λίμνη or Propontis[4] or now இலத்தீன்: mare Asoviense;[5] [6]கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கருங்கடலுடன் ஏறத்தாழ 4 கிலோ மீட்டர் அகலம் கொண்ட குறுகிய கெர்ச் நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சில சமயங்களில் அசோவ் கடல், கருங்கடலின் வடக்கு விரிவாக்கமாகவும் கருதப்படுகிறது.[7][8] அசோவ் கடல் உக்ரைன் நாட்டின் தெற்கிலும் மற்றும் ருசியாவின் தோனெத்ஸ்க் மாகாணத்தின் மேற்கிலும் அமைந்துள்ளது. தொன் ஆறு மற்றும் குபன் ஆறு போன்ற ஆற்று நீர்கள் அசோவ் கடலில் கலக்கிறது. அசோவ் கடலில் இருந்து கருங்கடலுக்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது. அசோவ் கடல் உலகின் மிக ஆழமற்ற கடல் ஆகும், இதன் ஆழம் 0.9 மற்றும் 14 மீட்டர் (2 அடி 11 அங்குலம் மற்றும் 45 அடி 11 அங்குலம்) வரை மாறுபடும்.[9][10] மணல், வண்டல் மற்றும் ஓடுகளை கொண்டு வரும் எண்ணற்ற ஆறுகளின் நீரோட்டத்தால் கடலின் ஆழம் பெருமளவில் குறைகிறது. இதையொட்டி ஏராளமான விரிகுடாக்கள் மற்றும் குறுகிய துப்பங்கள் அசோவ் கடலில் உருவாகின்றன. மேலும் கடலின் அடிப்பகுதி ஒப்பீட்டளவில் மென்மையாகவும் சமதளமாகவும் உள்ளதுடன், கடலின் ஆழம் படிப்படியாக குறைகிறது. மேலும் ஆறுகளின் பெருமளவு நீர் வரத்து காரணமாக, கடல் நீரின் உப்புத்தன்மை குறைவதுடன், அதிக அளவு உயிரியும் (பச்சை பாசி போன்றவை) இருப்பதால் நீர் நிறத்தை பாதிக்கிறது. ஏராளமான மிதவைவாழிகள் காரணமான, வழக்கத்திற்கு மாறாக அதிக மீன் உற்பத்தியை அசோவ் கடல் கொண்டுள்ளது. அசோவ் கடற்கரை தாவரங்கள் வளர்ச்சிக்கும், பறவைகளின் குடியிருப்புகளுக்கும் நல்வாய்ப்பாக உள்ளது.
அசோவ் கடல் | |
---|---|
அசோவ் கடல் | |
அசோவ் கடல் | |
அமைவிடம் | தெற்கு உக்ரைன் மற்றும் மேற்கு ருசியா |
ஆள்கூறுகள் | 46°N 37°E / 46°N 37°E |
வகை | கடல் |
முதன்மை வரத்து | தொன் ஆறு மற்றும் குபன் ஆறு |
வடிநில நாடுகள் | ருசியா மற்றும் உக்ரைன் |
அதிகபட்ச நீளம் | 360 km (220 mi) |
அதிகபட்ச அகலம் | 180 km (110 mi) |
மேற்பரப்பளவு | 39,000 km2 (15,000 sq mi)[1][2] |
சராசரி ஆழம் | 7 மீட்டர்கள் (23 அடி) |
அதிகபட்ச ஆழம் | 14 m (46 அடி) |
நீர்க் கனவளவு | 290 km3 (240×10 6 acre⋅ft) |
புவியியல் மற்றும் ஆழ்கடல் அளவியல்
தொகுருசியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே 2003-ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, அசோவ் கடல், இருநாடுகளால் நிர்வகிக்கப்படும் கடல் ஆகும்.[11]அசோவ் கடலின் வடக்கில் உக்ரைன் நாடும், மேற்கில் கிரிமியாவும், தென்கிழக்கில் ருசியாவும், தெற்கில் கருங்டலும் எல்லைகளாக உள்ளது.
அசோவ் கடல் 360 கிலோமீட்டர்கள் (220 mi) நீளம் மற்றும் 180 கிலோமீட்டர்கள் (110 mi) அகலமும் கொண்டது. மேலும் இதன் பரப்பளவு 39,000 சதுர கிலோமீட்டர்கள் (15,000 sq mi) உடையது. முந்தைய சோவியத் ஒன்றியத்தில் இதுவே மிகச்சிறிய கடல் ஆகும்.[12]அசோவ் கடலில் கலக்கும் ஆறுகளில் முக்கியமானது தொன் ஆறு மற்றும் குபான் ஆறுகள் ஆகும். அசோவ் கடலின் நீர் உப்புத்தன்மை குறைவாக உள்ளது. இக்கடலில் அதிக உமிழ்வுகளும், மணற்குன்றுகளும் காணப்படுகிறது. இது உலகின் குறைந்த ஆழம் கொண்ட கடல் ஆகும். இதன் சராசரி ஆழம் 7 மீட்டர்கள் (23 அடி) மற்றும் அதிகபட்ச ஆழம் 14 மீட்டர்கள் (46 அடி) ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kostianoy, p. 65
- ↑ "Marine Litter Report".
- ↑ "Et hoc mare est palus Maeotis famosissima..." (The Opus Majus of Roger Bacon, vol. 1, p. 357); Hofmann, vol. 3, p. 542.
- ↑ Caroli Egger Lexicon Nominum Locorum: Supplementum referens nomina Latina vulgaria (1985), p. 42.
- ↑ ...Palus Maotis, ovvero Mare Asoviense..." (Il mondo antico, moderno, e novissimo, ovvero Breve trattato ..., vol. 2, p. 767)
- ↑ The New Encyclopædia Britannica. Vol. 1. 2005. p. 758. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59339-236-9.
With a maximum depth of only about 46 அடிகள் (14 m), the Azov is the world's shallowest sea
- ↑ "Sea of Azov". Encyclopædia Britannica.
- ↑ "Map of Sea of Azov". worldatlas.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
- ↑ National Geographic. 185. National Geographic Society. 1994. p. 138. https://books.google.com/books?id=7dWAAAAAMAAJ&q=Azov+%22shallowest+sea%22.
- ↑ "Earth from space". NASA. Archived from the original on 2011-05-10.
- ↑ Treaty between the Russian Federation and Ukraine on cooperation in the use of the Sea of Azov and Kerch Strait, December 24, 2003, kremlin.ru (in உருசிய மொழி)
- ↑ Kapitonov, V. I. Borisov and E. I. (1973). Sea of Azov (in ரஷியன்). KKI. Archived from the original on 2010-09-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
ஊசாத்துணை
தொகு- Kosarev, Andrey G.; Kostianoy, Aleksey N. (2007). The Black Sea Environment. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-74291-3.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Sea of Azov தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.