அச்சாபல், பாரமுல்லா

அச்சாபல் (Achabal) என்பது ஜம்மு-காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது சோப்பூர் நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இலோரிகாமா, அல்சாபா காலனி, இலதூரா மற்றும் பெரோசுபோரா போன்ற ரபியாபாத்தின் முக்கிய கிராமங்களால் இந்த கிராமம் சூழப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை தேசிய நெடுஞ்சாலை மூலம் பெரோஸ்போரா-அச்சாபல் இணைப்பு சாலையிலிருந்து அணுகலாம், இது கந்த்வாரா, குப்வாரா மற்றும் காஷ்மீரின் பிற வடக்கு பகுதிகளுடன் இணைகிறது. இலதூரா-சோப்பூர் சாலை வழியாகவும் இதை அணுகலாம். அச்சாபல் ரபியாபாத்தின் மிகவும் முன்னேறிய மற்றும் பணக்கார கிராமம் என்று கூறப்படுகிறது. பாபா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜே & கே வங்கி கொண்ட காஷ்மீரில் உள்ள சில கிராமங்களில் இதுவும் ஒன்றாகும். அச்சாபல் மாவட்ட பாரமுல்லாவில் உள்ள ஒரு பிரபலமான கிராமம்.

கல்வி தொகு

அச்சாபல் கிராமத்தில் அரசு நடத்தும் ஒரு உயர்நிலைப் பள்ளி மற்றும் சுமார் 6 நடுத்தர மற்றும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இது ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியையும் கொண்டுள்ளது, ஷேக் உல் ஆலம் பொதுப் பள்ளி, இது ஆகாப் கமிட்டியால் நடத்தப்படுகிறது. இந்த கிராமத்தில் பல மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உருவாகியுள்ளனர். கல்வியைப் பொருத்தவரை, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அச்சாபல் கிராமத்தில் கல்வியறிவு விகிதம் 83.6% ஆகும்.

மதம் தொகு

இந்த கிராம மக்கள் அனைவரும் சுன்னி முஸ்லிம்கள் . இந்த கிராமத்தில் ஒரு ஜாமியா மஸ்ஜித் மற்றும் ஆறு மசூதிகள் உள்ளன. அவை அசுதான்போரா, கோரிபோரா-நசீன்போரா, பட்போரா மற்றும் சோடிபோரா போன்ற அந்தந்த மொகல்லாக்களில் அமைந்துள்ளன. ஜாமியா மஸ்ஜித் பிரதான சௌக் மாலிக்போராவில் அமைந்துள்ளது. அச்சாபலுக்கு இரண்டு தாருல் உலூம்கள் உள்ளன. ஒன்று பிரதான சௌக்கிலும் மற்றொன்று சோடிபோராவிலும் உள்ளன.

சுகாதாரம் தொகு

இந்த கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இது குறைந்த அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ளது. எனவே நோயாளிகள் சிறந்த சுகாதார வசதிகளைத்தேடி சோப்பூர், பாரமுல்லா நகரங்ளுக்குச் செஇகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ளூர் மருத்துவர்களின் 3 மருத்துவமனைகள் உள்ளன. இதில் ஒன்றை நசீன்போராவில் மருத்துவர் கக் கசன் மாலிக் நடத்துகிறார், அசுதான்போராவில் மருத்துவர் முக்தர் பாபா நடத்தும் இரண்டாவது மற்றும் மருத்துவர் பிர்தசு மாலிக் நடத்தும் ஜாமியா மஸ்ஜித் அருகே மாலிக்போராவில் மூன்றாவது மருத்துவமனை உள்ளன. .

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சாபல்,_பாரமுல்லா&oldid=2896548" இலிருந்து மீள்விக்கப்பட்டது