அச்சாபல் தோட்டங்கள்
அச்சாபல் தோட்டங்கள் (Achabal Gardens) , ("இளவரசர்களின் இடங்கள்") என்பது இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் நகரில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு சிறிய முகலாய தோட்டமாகும் . இமயமலை மலைகள் அருகே அமைந்துள்ள இந்த தளம் முன்பு "அக்சாவாலா" என்று அழைக்கப்படும் இந்துக்களின் புனித இடமாக இருந்திருக்கலாம். [1]
பின்னணி
தொகுஇது கி.பி 1620 இல் முகலாய பேரரசின் பேரரசர் ஜஹாங்கிரின் மனைவி நூர் ஜஹானால் கட்டப்பட்டது, "மொகலாயர்கள் அனைவரையும் விட மிகப் பெரிய தோட்ட ஆர்வலர்கள்" என்று அழைக்கப்பட்டனர்”. இந்த தோட்டம் குலாப் சிங் அவர்களால் சிறிய அளவில் புனரமைக்கப்பட்டது. இப்போது அது ஒரு பொது தோட்டமாக உள்ளது. [1] தோட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் அதிலுள்ள நீர்வீழ்ச்சி ஆகும். அது ஒரு குளத்தில் நுழையும் வண்ணம் வடிவமைக்கபட்டுள்ளது. [2]
இது 1620 இல் கட்டப்பட்டது. பின்னர் ஷாஜகானின் மகள் ஜஹனாரா பேகம் என்பவரால் 1634-1640 க்கு இடையில் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டம் அதன் நீருக்காக அறியப்பட்டது. மேலும் அதன் வடிவமைப்பு பாரம்பரிய பாரசீக சார் பாக்கின் (நான்கு தோட்டங்கள்) தழுவலாகும். சார் பாக் தோட்டம் மது, தேன், பால் மற்றும் நீர் ஆகிய நான்கு ஆறுகளைக் கொண்டுள்ளது என்பது அத்தோட்டம் பற்றிய குர்ஆனிய விளக்கமாகும். பாரம்பரிய சார் பாக் போலவே இத்தோட்டமும் அதனை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் மையத்தில் நீர் ஆதாரமும், நான்கு நீரோடைகளும் தோட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கின்றன. [3]
இந்த இடம் அதன் வசந்த காலத்திற்காகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காஷ்மீரில் மிகச் சிறந்ததாகவும், பிரிங்கி ஆற்றின் ஒரு பகுதியின் மறு தோற்றமாகவும் கருதப்படுகிறது. அதன் நீர் திடீரென ஒரு மலையின் அடியில் ஒரு பெரிய பிளவு வழியாக மறைந்து பிராங் பர்கானாவிலுள்ள வாணி திவால்கம் கிராமத்தில் நுழைகிறது. இதைச் சோதிக்கும் பொருட்டு, அதன் நீர் மறைந்துபோன ஒரு இடத்தில் பிரிங்கி ஆற்றில் சிறிதளவு வைக்கோல் வீசப்பட்டதாகவும், வாணி திவல்காமில் அச்சாபல் நீரூற்றில் இருந்து அந்த வைக்கோல் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. தியோடர் மரங்களால் அடர்த்தியாக மூடப்பட்டிருக்கும் சிறிய இடத்தின் அடிவாரத்திற்கு அருகிலுள்ள பல இடங்களிலிருந்து நீரூற்றின் நீர் வெளியேறுகிறது மற்றும் ஓரிடத்தில் அது ஒரு மனிதனின் உடலைப் போன்றிருக்கும் ஒரு பெரிய சாய்ந்த பிளவிலிருந்து வெளியேறி ஒரு அடி விட்டமும், 18 அங்குல உயரமுள்ள ஒரு தொகுதியை உருவாக்குகிறது.[4]
மற்ற காஷ்மீர் தோட்டங்களைப் போலவே, அச்சாபலும் ஒரு மலைப்பாதையில் அமைந்துள்ளது. அதன் நீர் ஆதாரம் மலைமேல் உள்ளது. சதுரமான தோட்டத்தின் பாரம்பரிய மையத்திலிருந்து தோட்டத்தின் மிக உயர்ந்த இடத்திற்கு நீர் ஆதாரம் மாற்றப்பட்டதால், வழக்கமான சார் பாக் வடிவமைப்பை தளத்தின் நிலப்பரப்புக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியிருந்தது. இந்த முறையில், ஒரு மைய நீரோடை அமைக்கப்பட்டது. மற்ற நீரோடைகள் குறைக்கப்பட்டன அல்லது வடிவமைப்பிலிருந்து அகற்றப்பட்டன. [5]
சிதைவுகளில் விழுந்த பின்னர், தோட்டம் சிறிய அளவில் குலாப் சிங் (ஜம்மு-காஷ்மீரின் மகாராஜா 1790 களின் பிற்பகுதியிலிருந்து 1857 வரை) அவர்களால் மீட்டெடுக்கப்பட்டது. இன்று, அச்சாபல் ஒரு பொதுத் தோட்டமாகும், அதன் அசல் வடிவத்தை விட தற்பொழுது சற்றே சிறியதாக காணபடுகிறது.
-
<nowiki> அச்சாபலில் முகலாய தோட்டங்கள்
-
அச்சாபலில் முகலாய தோட்டங்களுக்குள்
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Achabal Gardens. பரணிடப்பட்டது 23 திசம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம் Archnet.org. Retrieved 2012-01-17.
- ↑ Achabal Gardens. GardenVisit. 2008. Retrieved 2012-01-17.
- ↑ https://web.archive.org/web/20121223005814/http://archnet.org/library/sites/one-site.jsp?site_id=14962
- ↑ Koul, Pandit Anand: Archaeological Remains in Kashmir page 94. Mercantile press, 1935.
- ↑ https://web.archive.org/web/20121223005814/http://archnet.org/library/sites/one-site.jsp?site_id=14962
மேலும் படிக்க
தொகு- Brookes, John. (1987). Gardens of Paradise: History and Design of the Great Islamic Gardens. London: Weidenfeld & Nicolson.
- Crowe, Sylvia; Haywood, S.; Jellicoe, S.; Patterson, G. (1972). The Gardens of Mughal India. London: Thames and Hudson.
- Petruccioli, Attilio. "Gardens and Religious Topography in Kashmir." Environmental Design. 1-2 (1991):64-73.