அச்சுதானந்த் தஞ்சை ரவி
அச்சுதானந்த் தஞ்சை ரவி (Achuthanand Tanjore Ravi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சென்னையைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] [2] இவரது படைப்புகள் [3] இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு காட்சியகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உருவப்படங்களுக்காகவும் புகைப்படப் பத்திரிகையாளர் எனவும் இவர் நன்கு அறியப்படுகிறார்.
அச்சுதானந்த் தஞ்சை ரவி Achuthanand Tanjore Ravi | |
---|---|
பிறப்பு | 22 சூன் 1991 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | புகைப்படக் கலைஞர் |
தொழில்
தொகுஅச்சுதானந்த் 2008 ஆம் ஆண்டில் தனது புகைப்படப் பத்திரிக்கை வாழ்க்கையைத் தொடங்கினார். தேசிய மற்றும் பன்னாட்டு அளவு முகமைகளில் பகுதிநேர புகைப்பட பத்திரிக்கையாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். . முக்கியச் செய்திகள் மற்றும் ஆவணப்படச் செய்திகள் ஆகியவற்றைத் தேடி இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களுக்கும் புகைப்பட ஆர்வம் இவரை அழைத்துச் சென்றது. ஒரு புகைப்படக் கலைஞராகவும், சிறந்த புகைப்பட பத்திரிக்கையாளராகவும், இணையத்தின் உதவியுடனும் பல்வேறு பட்டறைகளில் கலந்துகொண்டு பல்வேறு நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அச்சுதானந்த் தனது நண்பர் அசோக் குமாரின் உதவியுடன் வளர்ந்து வரும் புகைப்படக் கலைஞர்களுக்கான தளமான மெட்ராசு இன் மோசன் என்ற குழுவை நிறுவினார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
தொகுஅச்சுதானந்த் தனது புகைப்படப் படங்களுக்காக அங்கீகாரம் பெற்றுள்ளார், இதில் "மகாகும்பமேளா-2013", மகாகும்ப விழா பற்றிய புகைப்பட ஆவணப்படம் மற்றும் "பார்வைக்கு அப்பால்", [4] பார்வையற்றோர் பற்றிய புகைப்பட ஆவணப்படம் ஆகியவை அடங்கும்.. இந்தப் பணிக்காக இவர் யுனெசுகோவிடமிருந்து மானியமும் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Parthasarathy, Anusha (20 June 2013). "One Shot... a 1,000 words". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/one-shot-a-1000-words/article4833585.ece. பார்த்த நாள்: 30 January 2019.
- ↑ Vijay, Hema (24 August 2013). "Insight to Reality". Deccan Herald. https://www.deccanherald.com/content/353012/insight-reality.html. பார்த்த நாள்: 30 January 2019.
- ↑ Tanjore Ravi, Achuthanand. "I Travel, I Discover, I click". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 2013-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131106084236/http://newindianexpress.com/cities/chennai/I-travel-I-discover-I-click.../2013/04/29/article1565750.ece?service=print.
- ↑ Achuthanand. "Beyond Sight". Achuthanand Tanjore Ravi.
புற இணைப்புகள்
தொகு- தி இந்து-அச்சுதானந்த் தஞ்சை ரவி
- நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-அச்சுதானந்த் தஞ்சை ரவி பரணிடப்பட்டது 2013-11-06 at the வந்தவழி இயந்திரம்
- டெக்கான் ஹெரால்டு-அச்சுதானந்த் தஞ்சை ரவி
- டெட் எக்ஸ்-அச்சுதானந்த் தஞ்சை ரவி
- கவனம் பெருநகரம் - அச்சுதானந்த்
- டெக்கான் குரோனிக்கல் - அச்சுதானந்த் ரவி
- கும்பத்தின் எண்ணற்ற முகங்கள் - டெக்கான் குரோனிக்கிள்