அஜய்குமார் மிட்டல்
அஜய்குமார் மிட்டல் (Ajay Kumar Mittal) (பிறப்பு 30, செப்டம்பர் 1958) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாவார்.[1]
வாழ்க்கை
தொகுஏ. கே. மிட்டல் 1958, செப்டம்பர் 30 அன்று சத்தீஸ்கரில் பிறந்தவர். இவர் தன் இளங்கலை வணிகவியல் படிப்பை தில்லியல் முடித்தார். பின்னர் தில்லி சட்டக்கல்லூரியில் 1980 இல் சட்டப்படிப்பையும் முடித்து பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். பல சட்டப்பிரவுகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், வருமான வரித்துறை வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018 மே 4 முதல் சூன் 2 ஆம் தேதி வரை பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் 2019 மே 28 ஆம் நாள் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2020 செப்டம்பரில் ஓய்வு பெறவுள்ள இவரை சென்னை உயர்நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்- கொலீஜியம் பரிந்துரை". செய்தி. oneindia. 4 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றம்: மேகாலயா தலைமை நீதிபதி ஏ. கே. மிட்டல் நியமனம்; கொலீஜியம் பரிந்துரை". செய்தி. இந்து தமிழ். 4 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)