அஜய் பூபதி
அஜய் பூபதி ராஜு (Ajay BhupathiRaju) (பிறப்பு; அஜய் நரசிம்ம நாக பூபதி ராஜு) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் இயக்குனராக அறிமுகமான ஆர்எக்ஸ் 100 என்ற திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.[1] இப்படம் இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2] 2019 இல் சிறந்த அறிமுக இயக்குனருக்கான (தெலுங்கு) தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதைப் பெற்றார்.[3] மகாசமுத்திரம் (2021) என்ற இவரது இரண்டாவது படத்தில் சர்வானந்த், சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோர் நடித்திருந்தனர்.[4][5][6]
அஜய் பூபதிராஜு | |
---|---|
பிறப்பு | அஜய் நரசிம்ம நாக பூபதிராஜு 14 ஆகத்து 1985 ஆத்ரேயபுரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | அஜய் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2011 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சிரிஷா (தி. 2018) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅஜய் பூபதி ராஜுவின் தந்தை பூபதி ராமராஜு வேகேசனா ஆந்திராவின் ஆத்ரேயபுரத்தில் ஒரு விவசாயியாக இருந்தார். தனது கல்விக்குப் பிறகு, தெலுங்குத் திரையுலகில் இயக்குனராகப் பணியாற்ற ஐதராபாத்து சென்றார்.
2023 ஆம் ஆண்டில், இவரது இயக்கத்தில் "மங்கலவாரம்" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.[7]
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் தனது நீண்ட நாள் காதலியான சிரிஷா என்பவரை 25 ஆகஸ்ட் 2018 அன்று திருமணம் செய்து கொண்டார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "'RX 100' turns 3, Kartikeya awaits collaboration with director Ajay Bhupathi again". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-12. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
- ↑ "RX100 Hindi remake: Ahan Shetty and Tara Sutaria's Tadap goes on floors". India Today. August 6, 2019.
- ↑ "Siima Awards: 2019 Winners". Archived from the original on 2021-04-22. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
- ↑ "Sharwanand, Siddharth and Aditi Rao Hydari's Maha Samudram gets release date". The News Minute (in ஆங்கிலம்). 2021-08-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
- ↑ "Siddharth & Sharwanand's Mahasamudhram: Makers of Ajay Bhupathi directorial to release the film on August 19". PINKVILLA (in ஆங்கிலம்). 2021-01-30. Archived from the original on 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
- ↑ "Maha Samudram: Sharwanand teams up with director Ajay Bhupathi for a bilingual". India Today (in ஆங்கிலம்). 2020-09-07. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
- ↑ Sistu, Suhas (2023-10-21). "'Mangalavaaram' trailer: Breathtaking, Emotionally Resonant, Fiery!" (in english). பார்க்கப்பட்ட நாள் 2023-10-21.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "How the success of RX100 helped Ajay Bhupathi win over his fiancee's family - Times of India" (in ஆங்கிலம்). 2018-08-12. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.